வெறி பிடிச்ச மிருகம்.. பொண்ணுங்களை அப்படிப் போட்டு அடிப்பார்.. சல்மான் கானை விளாசிய முன்னாள் காதலி!

மும்பை: 56 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்னமும் முரட்டு சிங்கிளாகவே உள்ளார்.

Recommended Video

Salman Khan may be Questioned? | Sushant Singh Case

ஆனால், பாலிவுட்டில் பல நடிகைகளுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக ஏகப்பட்ட செய்திகள் உலா வந்துள்ளன.

இந்நிலையில், அவருடைய முன்னாள் காதலிகளில் ஒருவரான பாலிவுட் நடிகை சோமி அலி சல்மான் கானை வெறி பிடித்த மிருகம், பெண்களை கொடூரமாக அடிப்பவன் என விளாசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

சல்மான் கான்

சல்மான் கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் பல ஆண்டுகளாக அசத்தி வருகிறார் சல்மான் கான். மான் வேட்டை முதல் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கு சென்று திரும்பிய போதும், சல்மான் கான் ரசிகர்களை அவரை ஒரு போதும் விட்டுக் கொடுக்காமல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை 15 சீசன்களாக நடத்தி உள்ளார். அடுத்த சீசனுக்கு 500 கோடி மேல் சம்பளம் கேட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெறிபுடிச்ச மிருகம்

வெறிபுடிச்ச மிருகம்

சல்மான் கானை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வழிபட்டு வருவதை பார்த்து கடுப்பான பாலிவுட் நடிகை சோமி அலி, அவன் ஒரு வெறிபுடிச்ச மிருகம், பெண்களை கொடூரமாக தாக்குபவன் என சல்மான் கான் பெயரை குறிப்பிடாமல் அவர் நடித்த படத்தை குறிப்பிட்டு போட்டுள்ள போஸ்ட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பாலிவுட்டின் ஹார்வே வெயின்ஸ்டீன்

பாலிவுட்டின் ஹார்வே வெயின்ஸ்டீன்

முன்னதாக பாலிவுட்டின் ஹார்வே வெயின்ஸ்டீன் சல்மான் கான் என அவர் போட்ட க்ரிப்டிக் போஸ்ட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாலிவுட்டில் தன்னை போல பல பெண்கள் அவரிடம் ஏமாந்து போயுள்ளோம் என்றும், சீக்கிரமே அனைவரும் வெளியே வந்து புகார் அளித்து உன்னையும் தூக்கி உள்ளே வைப்பாங்க என்று பேசியிருந்தார். ஹாலிவுட்டில் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ் லவ்வர்

எக்ஸ் லவ்வர்

56 வயதாகியும் நடிகர் சல்மான் கான் இதுவரை எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சக நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், ஹிரித்திக் ரோஷன் உள்ளிட்டோர் திருமணம் செய்து கொண்டு அவர்களுது குழந்தைகளே பாலிவுட்டில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர். ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடன் கிசுகிசுக்கபட்ட சல்மான் கானும் சோமி அலியும் காதலித்து பின்னர் பிரேக்கப் செய்து கொண்டதாக சோமி அலியே கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X