ஹனிமூன்ல போய் யாராவது பலாத்காரம் பண்ணிட்டான்னு கேஸ் போடுவாங்கலா? பூனம் பாண்டே கணவர் விளாசல்!

மும்பை: கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய ரியாலிட்டி ஷோவான லாக்கப்பில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பூனம் பாண்டே, அங்கே சென்றும் தனது கணவர் மீது புகார்கள் சொல்லி புலம்பி வரும் நிலையில், சாம் பாம்பே அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆல்ட் பாலாஜி மற்றும் எம்.எக்ஸ் பிளேயரில் லைவ்வாக ஓடிக் கொண்டிருக்கும் புதிய ரியாலிட்டி ஷோ லாக்கப்.

இந்த ஷோவை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வருகிறார். அதில், ஒரு போட்டியாளராக பூனம் பாண்டே பங்கேற்று இருக்கிறார்.

பிக் பாஸ் போலவே

பிக் பாஸ் போலவே

இந்தியில் சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில், அதே போல ஒரு ரியாலிட்டி ஷோ தான் கங்கனா ரனாவத் ஒடிடியில் தொகுத்து வழங்கி வரும் லாக்கப் ஷோவும். பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டு, போட்டியாளர்கள் அனைவருக்கும் கைதி டிரெஸ் கொடுத்து உள்ளே அடைத்து வைத்து சர்ச்சைகளையும், சண்டைகளையும் மூட்டி வருகின்றனர்.

பாத்ரூமுக்கு கதவே கிடையாது

பாத்ரூமுக்கு கதவே கிடையாது

இந்த நிகழ்ச்சியில் ஹைலைட்டே என்னவென்றால் பிரபலங்களுக்கு எந்தவொரு சொகுசான வசதியும் கிடையாது. சாதாரண படுக்கை வசதி, அலுமினிய தட்டில் சோறு குறிப்பாக எந்தவொரு பாத்ரூமிலும் கதவே கிடையாது. வெறும் ஸ்க்ரீன் போட்டு மட்டுமே மறைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பூனம் பாண்டே உள்ளிட்ட ஏராளமான விவாகரம் பிடித்த பெண் போட்டியாளர்களும் உள்ளே இருக்கின்றனர்.

கணவரை பற்றி புலம்பல்

கணவரை பற்றி புலம்பல்

நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி உள்ள நடிகை பூனம் பாண்டே இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். கைதி உடையை கொடுத்தாலும், அதிலும் சட்டை பட்டனை முழுவதுமாக திறந்து விட்டு கவர்ச்சி தரிசனம் காட்டி வரும் பூனம் பாண்டே தனது கணவர் சாம் பாம்பே குறித்தும் உள்ளே புலம்பித் தள்ளி இருக்கிறார்.

கடுப்பான சாம் பாம்பே

கடுப்பான சாம் பாம்பே

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது காதலி பூனம் பாண்டேவை தயாரிப்பாளர் சாம் பாம்பே திருமணம் செய்தார். ஆனால், தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை பலாத்காரம் செய்ததாகவும் பூனம் பாண்டே அவர் மீது பல முறை போலீசில் புகார் அளித்தது பரபரப்பை கிளப்பியது. இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சியில் சாம் பாம்பே பற்றி பூனம் பாண்டே பேசியது அவரை ரொம்பவே கடுப்பாக்கி இருக்கிறது. இந்நிலையில், ஆன்லைன் போர்ட்டலுக்கு அவர் அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஹனிமூனில் பலாத்காரமா

ஹனிமூனில் பலாத்காரமா

திருமணம் முடிந்த கையோடு கோவாவுக்கு இருவரும் ஹனிமூன் சென்றிருந்த நிலையில், திருமணம் ஆகி வெறும் 13 நாட்களில் தனது கணவர் தன்னை பலாத்காரம் செய்து விட்டார் என போலீசில் புகார் கொடுத்து என்னை கம்பி எண்ண வைத்தார் பூனம் பாண்டே, ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் யாராவது இப்படி புகார் கொடுப்பார்களா? என் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. சில நாட்கள் கழித்து அந்த வார்த்தையை தவறாக பயன்படுத்தி விட்டேன் என மன்னிப்பு கேட்டு கேஸை வாபஸ் பெற்றார். அதன் பின்னர் தான் மீண்டும் ஒன்றாக இணைந்தோம் என்றார்.

பெண்கள் போன் பண்ணா போதும்

பெண்கள் போன் பண்ணா போதும்

ஆண்களுக்கு உளவியல் ரீதியாக பெண்கள் ஆயிரம் பிரச்சனைகளை கொடுத்து வருகின்றனர். அதையெல்லாம் கேட்க இங்கே ஒருவரும் இல்லை. ஆனால், பெண்கள் போன் பண்ணினால் போதும், அடுத்த நொடியே எந்தவொரு விசாரணையும் இன்றி உள்ளே தூக்கி வைத்துவிடுவார்கள். என்னை 20 முறை உள்ளே தூக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், சரியான ஆதாரங்கள் இல்லாததால் நான் வெளியே வந்து விட்டேன் என்றார்.

லாயல்டி இல்லை

லாயல்டி இல்லை

காதலித்து திருமணம் செய்து விட்டதால் நானும் அவர் செய்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன். இதுவரை அவர் நான் வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருக்கிறேன் என புகார் அளித்திருக்கிறாரா? இல்லவே இல்லை. என் மனைவியிடம் அத்தனையும் இருக்கு ஆனால், லாயல்டி மட்டும் இல்லை என சாம் பாம்பே பேசியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. லாக்கப் ரியாலிட்டி ஷோவுக்கு இது மேலும், டிஆர்பியை ஏற்ற தீனி போட்டிருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X