சரவெடியா இருக்கே.. ஷாருக்கானின் பதான் டீசர் ரிலீஸ்.. தீபிகா படுகோன் உச்ச கட்ட ஹாட்னஸ் தான் போங்க!
சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானின் 57வது பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு தரமான பதான் டீசரை வெளியிட்டு ட்ரீட் கொடுத்துள்ளார் ஷாருக்கான்.
கடந்த 2018ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜீரோ படம் அதன் டைட்டிலை போலவே ஊற்றிக் கொண்டது. அதன் பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் அவர் வெளியிடவில்லை.
சமீபத்தில் தொடர்ந்து சில படங்களில் கேமியோவாக வந்து சென்ற ஷாருக்கான் அடுத்த ஆண்டு ஏகப்பட்ட சம்பவங்களை செய்ய காத்திருக்கிறார்.

ஷாருக்கான் கேமியோ
இந்த ஆண்டு ஷாருக்கான் கேமியோவாக நடித்த 3 படங்கள் வெளியாகி உள்ளன. மாதவனின் ராக்கெட்ரி படத்தின் இந்தி வெர்ஷனல் நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் இளம் வயது லாலிடம் நடனத்தை கற்றுக் கொண்டு ஷாருக்கான் ஆனதாக காட்சிகள் இடம்பெற்றன. பிரம்மாஸ்திரா படத்தில் வானர அஸ்திரம் சக்தி உடையவராக நடித்து அசத்தி இருந்தார் ஷாருக்கான்.

பதான் பந்தயம் அடிக்கும்
4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. பாலிவுட்டில் ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடித்த வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ளார் ஷாருக்கான். அந்த படத்தின் வெறித்தனமான டீசரை பார்த்தாலே படம் பாக்ஸ் ஆபிஸ் பந்தயம் அடிக்கும் என தெரிகிறது.

கிளாமர் தீபிகா படுகோன்
ஷாருக்கானுக்கு சரியான ஆன் ஸ்க்ரீன் ஜோடி என்றால் அது எப்போதுமே தீபிகா படுகோன் தான். ஓம் ஷாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் என இருவரும் இணைந்து நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. இந்நிலையில், பதான் படத்தின் டீசரில் இணையத்தையே தீப்பிடிக்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் அவர் வரும் முதல் காட்சியே தெறிக்கிறது.

ஜான் ஆபிரகாம்
ஹ்ரித்திக் ரோஷனுக்கு வில்லனாக வார் படத்தில் டைகர் ஷெராஃப் நடித்திருந்தார். அதே போல இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் ஃபேஸ் ஆஃப் காட்சிகள் ரசிகர்களை இப்பவே பதான் பிளாக்பஸ்டர் ஹிட் தான் என சொல்ல வைத்துள்ளது. அமீர்கானின் லால் சிங் சத்தா பாலிவுட்டை காப்பாற்றும் என நினைத்தால் ஷாருக்கானின் பதான் தான் காப்பாற்ற போகிறது என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

அட்லி பட அறிவிப்பு வருமா
ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு பதான் படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில், அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படம் குறித்து ஏதாவது அப்டேட் வருமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பதான் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வரும் ஜனவரி 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











