ஸ்பெயினுக்கு பறக்கும் ஷாருக்கான், தீபிகா... எதற்கு தெரியுமா
மும்பை : ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்து வரும் பதான். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. இந்த படத்தில் ஜான் ஆப்ரஹாமும் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷுட்டிங்கில் ஜுலை மாதம் முதல் தீபிகாவும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட ஷுட்டிங்கிற்காக ஷாருக்கானும், தீபிகாவும் ஸ்பெயின் செல்ல உள்ளனர். இங்கு பிரம்மாண்டமான பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட உள்ளதாம்.
தமிழில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளையும் ஸ்பெயினில் நடத்தவே முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கு ஷுட்டிங் நடத்த அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் படமும் தாமதமாகி வந்தது. இதனால் ஸ்பெயினில் எடுக்க திட்டமிட்டிருந்த க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளை தற்போது ரஷ்யாவில் எடுத்து வருகின்றனர்.
இது பற்றிய படக்குழுவுக்கு நெருங்கிய தகவல்கள் கூறுகையில், இந்த இடங்களில் இது வரை எந்த பாலிவுட் படத்தின் பாடல் காட்சிக்காகவும் ஷுட்டிங் நடத்தப்பட்டது இல்லையாம். ஸ்பெயினில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஷுட்டிங் நடத்துவதற்கான அனைத்து அனுமதிகளையும் டைரக்டர் சித்தார்த் ஆனந்த் வாங்கி விட்டாராம்.
இந்திய சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த புதிய முயற்சியை சித்தார்த் ஆனந்த் மற்றும் ஆதித்ய சோப்ரா இணைந்து செய்வதாக கூறப்படுகிறது. பதான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பாக தான் இந்த பாடல் காட்சி எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதே போல் சல்மான் கான் நடிக்கும் டைகர் 3 படத்தில் ஷாருக்கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஷாருக்கான், தீபிகா இடையேயான கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்து வருகிறது. தீபிகா, முதல் முறையாக 2007 ல் ஓம் சாந்தி ஓம் படத்தில் தான் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தார். அதைத் தொடர்ந்து ஹாப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களிலும் இருவரும் இணைந்து நடித்தனர்.
ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதும் உறுதியாகி உள்ளது. பதான் படத்தை முடித்த பிறகு அட்லீ படத்தின் வேலைகளை ஷாருக்கான் துவக்க உள்ளார்.
ஷாருக்கான் கடைசியாக 2018 ல் ஜீரோ என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் மிகப் பெரிய தோல்விப்படமாக அமைந்தது. கிட்டதட்ட 4 ஆண்டுகளாக ஷாருக்கான் படங்கள் ஏதும் ரிலீசாகாததால் பதான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பெ்போது வரும் என ஷாருக்கானின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











