டைரக்டர்களிடம் ஷாருக்கான் வைக்கும் ஸ்பெஷல் கோரிக்கை

மும்பை : கிட்டதட்ட ஒரு மாதங்களாக ஷாருக்கான் குடும்பத்தில் நிலவி வந்த இறுக்கமான நிலைமை அக்டோபர் 28 ம் தேதி தான் முடிவுக்கு வந்துள்ளது. ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், போதைப் பொருள் வழக்கில் அக்டோபர் மாத துவக்கத்தில் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மூன்று வார சிறைவாசத்திற்கு பிறகு ஆர்யானுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆர்யான் கைது செய்யப்பட்டது முதல் ஷாருக்கானும் வெளியில் தலை காட்டாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார். கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மீண்டும் ஷுட்டிங்

மீண்டும் ஷுட்டிங்

தற்போது மகன் வீட்டிற்கு வந்து விட்டதால் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார் ஷாருக்கான். மகன் ஆர்யான் கானின் பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடி முடித்து உள்ளார். அனைத்து பிரச்சனைகளும் ஓரளவிற்கு முடிவுக்கு வந்து விட்டதால் மீண்டும் ஷுட்டிங்கிற்கு திரும்பி உள்ளார் ஷாருக்கான்.

ஸ்பெஷல் கோரிக்கை

ஸ்பெஷல் கோரிக்கை

பதான் மற்றும் அட்லீ இயக்கும் ஆக்ஷன் படங்களில் பிஸியாக நடித்து வரும் ஷாருக்கான் வீட்டில் இருந்து விரும்பவில்லையாம். சமீபத்தில் நடந்த ஆர்யான் பிரச்சனை காரணமாக டைரக்டர்களிடம் ஸ்பெஷல் கோரிக்கை ஒன்றை முன்வைத்து வருகிறாராம் ஷாருக்.

குடும்பத்தை விரும்பும் ஷாருக்

குடும்பத்தை விரும்பும் ஷாருக்

அதாவது, ஷுட்டிங்களை நீண்ட காலம் தொடர்ந்து வைக்காமல் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு செல்லும் வகையில் வைக்கும்படி கேட்டு வருகிறாராம். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்து விட்டு, பிறகு ஷுட்டிங்கை தொடர நினைக்கிறாராம் ஷாருக்கான்.

ஐடியா நல்லாதான் இருக்கு

ஐடியா நல்லாதான் இருக்கு

அதே சமயம் ஷுட்டிங்கும் தன்னால் தொடர்ந்து பாதிக்கப்படாமல் இருக்க, தான் குடும்பத்தினருடன் இருக்கும் நாட்களில் மற்ற நடிகர் - நடிகைகளின் காட்சிகளை எடுத்துக் கொள்ளும்படியும், தான் ஷுட்டிங்கிற்கு வரும் நாட்களில் தான் நடிக்கும் காட்சிகளை முதலில் எடுக்கும்படியும் கேட்டுள்ளாராம்.

பேலன்ஸ் செய்யும் ஷாருக்

பேலன்ஸ் செய்யும் ஷாருக்

ஷுட்டிங்கும் இனி தன்னால் தாமதம் ஆகி, பாதிக்கப்படாமலும், அதே சமயம் குடும்பத்துடனும் தான் நேரத்தை செலவிடவும் நினைக்கிறாராம் ஷாருக். குடும்பம், நடிப்பை என இரண்டையும் பேலன்ஸ் செய்து கொண்டு செல்ல நினைக்கிறாராம். ஆர்யான் உள்ளிட்ட குடும்பத்தை பாதுகாப்பாக இருக்க வைக்கவே ஷாருக் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

ஏற்க தயாராகும் டைரக்டர்கள்

ஏற்க தயாராகும் டைரக்டர்கள்


முதலில் ஷாருக்கானின் இந்த கோரிக்கையை கேட்ட டைரக்டர்கள் குழப்பமடைந்தாலும், ஏற்கனவே ஒரு மாதம் கால தாமதமாகி விட்டதால், எப்படியோ நஷ்டம் ஏற்படாமல் வேலை நடந்தால் சரி என்று ஷாருக்கானின் கோரிக்கையை கேட்க முன் வந்துள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X