புனே மெட்ரோ ஸ்டேஷனில் ஷாருக்கான்...வைரலாகும் ஃபோட்டோ
புனே : பாலிவுட்டின் கிங் என வர்ணிக்கப்படும் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் புனே மெட்ரோ ஸ்டேஷனுக்கு வந்த ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
பாலிவுட்டின் டாப் ஹீரோவான ஷாருக்கான், கடைசியாக 2018 ல் ஆனந்த் எல் ராய் இயக்கிய ஜீரோ படத்தில் நடித்தார். இந்த படம் மிகப் பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதற்கு பிறகு இவர் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. இதனால் ஷாருக்கின் ரசிகர்கள் அவரை மீண்டும் பெரிய திரையில் காண்பதற்காக, அவரது அடுத்த பட ரிலீஸ் எப்போ என காத்திருக்கிறார்கள்.

அன்றே சொன்ன அட்லீ
இதற்கிடையில் 2019 ல், ட்விட்டரில் Ask Me Anything பகுதியில், டைரக்டர் அட்லீயிடன் ரசிகர் ஒருவர், நீங்கள் ஷாருக்கானை வைத்து படம் எடுப்பீங்களா என கேட்டார். அதற்கு பதிலளித்த அட்லீ, எனக்கு ஷாருக்கான் மீது மிகப் பெரிய மரியாதை உள்ளது. அவருக்கும் எனது படங்கள் பிடிக்கும். விரைவில் நாங்கள் இணையும் படம் நடக்கும் என நம்புகிறேன் என கூறி இருந்தார்.

அட்லீ படத்தில் ஷாருக்கான்
இந்நிலையில் ஷாருக்கான் தற்போது பதான் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த வாரம் துவங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதில் நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டதாக சொல்லப்பட்டு, அது தொடர்பான ஃபோட்டோக்களும் வெளியாகின.

ஆரம்பமே அதிரடி ஆக்ஷன்
முதல்கட்டமாக புனே மெட்ரோ ஸ்டேஷனில் 10 நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். அதாவது மெட்ரோ ரயிலை வில்லன்கள் கடத்துவது போலவும், அவர்களிடம் இருந்து ஹீரோ ஷாருக்கான் மக்களை காப்பாற்றுவது போன்ற சீன் தான் எடுக்கப்பட உள்ளதாம். இதைத் தொடர்ந்து படக்குழு மும்பை செல்ல உள்ளது.

முதல் ஹீரோ ஷாருக்கான்
புனே மெட்ரோ ஸ்டேஷன் இது வரை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக ஷுட்டிங் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாம். புனே மெட்ரோ ஸ்டேஷனில் ஷுட்டிங் நடத்தும் முதல் ஹீரோ ஷாருக்கான் தான். தற்போது எடுக்கப்பட்டு வரும் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்காக ஷாருக்கான் நேற்று புனே மெட்ரோ ஸ்டேஷனுக்கு வந்துள்ளார்.

வைரலாகும் ஃபோட்டோ
அப்போது அங்கிருந்த மெட்ரோ நிலைய ஊழியர்கள் ஷாருக்கானுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்துள்ளார். ரசிகர்கள் சிலரும் ஷாருக்கானுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த ஃபோட்டோக்களை ஏராளமான ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததால் இவை செம வைரலாகி வருகின்றன.

வில்லனாக ராணா
ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜவான் படத்தில் ஒரு கேரக்டருக்கு நயன்தாராவும், மற்றொரு கேரக்டருக்கு பிரியாமணியும் ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களுடன் இந்த படத்தில் தமிழ் காமெடியன் யோகிபாபுவும், வில்லனாக தெலுங்கு ஹீரோ ராணா டகுபதியும் நடிக்க உள்ளனராம். உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன பாகுபலி படத்தில் ஏற்கனவே ராணா வில்லனாக நடித்துள்ளார்.

செட்டே கிடையாது
இந்த படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானும், பேக் கிரவுண்ட் இசையை அனிருத்தும் அமைக்க உள்ளனர். ராணுவ பின்புலம் கொண்ட படம் என்பதால் இந்த படத்தில் 80 சதவீதம் காட்சிகள் செட் அமைக்கப்படாமல் நிஜ சூழலிலேயே எடுக்கப்பட உள்ளதாம். ஜவான் படம் பற்றி அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் இந்த படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகரித்து வருகிறது.

முக்கிய மொழிகளில் ஜவான்
ஜவான் படம் இந்தி, தமிழ் இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட உள்ளதாம். தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த படத்தை டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனராம். இந்த படத்தை ஷாருக்கானே தயாரித்து நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











