போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பரபரக்கும் பாலிவுட்

மும்பை : போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் மற்றும் அவரது நண்பர் அர்பாஸ் மெர்சன்ட் மற்றும் 6 பேரிடம் மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Shahrukh khans son Aryan khan was questioned by NCB

ஆர்யான் கான், தனது நண்பர்கள் சிலருக்கு மும்பை கடலோர பகுதியில் நிறுத்தப்பட்ட வெளிநாட்டு கப்பலில் பார்ட்டி கொடுத்துள்ளார். இதில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் தெரிந்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கப்பலில் சோதனை நடத்தி உள்ளனர்.

Recommended Video

Shahrukh Khan மகன் Aryan போதை பொருள் Party நடத்தி கைதாகியுள்ளார் | Gowri Khan

அப்போது ஆர்யான் உள்ளிட்டோரை போலீசார் கையும் களவுமாக பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் ஆர்யான் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டதாகவும் தகவல் ஏதும் இல்லை. இந்த பார்ட்டி நடத்த ஏற்பாடு செய்த 6 பேருக்கு என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஆர்யானின் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் போதை கடத்தலுக்கும் ஆர்யானுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். பலருடைய போன்களில் ரகசிய உரையாடல்கள், செய்தி பறிமாற்றங்கள் ஆகியவற்றை கண்காணித்த போது தான் போதை பொருள் பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.

ஷாருக்கான் - கவுரி கான் தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் தான் ஆர்யான் கான். சுகானா கான் என்ற மகளும், ஆப்ராம் என்ற மற்றொரு மகனும் உள்ளனர். ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் படம், பதான் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படத்தின் ஷுட்டிங்கும் மும்பையில் தான் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் இருந்து வந்த 3 பெண்களும் இந்த பார்ட்டில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்கள் முக்கியமாக தொழிலதிபர்களின் மகள்கள் என கூறப்படுகிறது. கப்பலில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், ஃபேஷன் துறையை சேர்ந்த பலர் சார்பில் மூன்று நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக தான் இந்த கப்பலில் ஏற்பாடுகள் நடந்துள்ளது. அதில் தான் இந்த பார்டியும் நடத்தப்பட்டுள்ளது. கப்பலில் மிதந்த படி இந்த பார்ட்டி நடக்கும். மும்பை கடற்கரை பகுதி துவங்கி, கடலின் நடுப்பகுதி வரை இந்த கப்பல் பயணிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X