மகன் ஆர்யானை பாதுகாக்க ஷாருக்கான் செய்த காரியத்தை பாருங்க

மும்பை : பாலிவுட்டின் சூப்பர் ஹீரோ ஷாருக்கான் மகன் ஆர்யான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது முதல் வெளியில் செல்லாமல், யாரையும் சந்திக்காமல் இருந்து வந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் ஆரியானுக்கு ஜாமின் கிடைத்தது.

மூன்று வார சிறை வாழ்க்கைக்கு பிறகு வீடு திரும்பி உள்ளதால் ஷாருக்கானும், கவுரியும் மன உளைச்சலில் இருந்து மீண்டுள்ளனர். ஆர்யான் சிறையில் இருந்த போது இருவரும் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் இருந்ததாக கூறப்பட்டது.

கண்ணீர் விட்ட ஆர்யான்

கண்ணீர் விட்ட ஆர்யான்

ஆர்யான் கான் வீட்டிற்கு வந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் அவரை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டனராம். பெற்றோரை பார்த்ததும் ஆர்யானும் கண்கலங்கியதாக கூறப்படுகிறது. இது போல் பல உணர்ச்சிபூர்வமான சம்பவங்கள் ஷாருக்கான் வீட்டில் நடந்ததாம்.

ஷாருக்கானின் புதிய கவலை

ஷாருக்கானின் புதிய கவலை

மகன் வீட்டிற்கு வந்து விட்டதால் தற்போது ஷாருக்கான் மற்றும் கவுரிக்கு மகனின் பாதுகாப்பு பற்றி புதிய கவலை வந்துள்ளதாம். இதனால் ஆர்யானின் பாதுகாப்பிற்காக சில பெரிய நடவடிக்கைகளை எடுக்க ஷாருக்கானும், கவுரி கானும் முடிவு செய்துள்ளார்களாம்.

ஷாருக்கான் எடுத்த முடிவு

ஷாருக்கான் எடுத்த முடிவு

தனக்கு நம்பிக்கையான பாடிகார்டாக எப்படி ரவி சிங் இருக்கிறாரோ அது போல் மகன் ஆர்யானை தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்ள ஒரு நம்பிக்கையான பாடிகார்டை நியமிக்க ஷாருக்கான் திட்டமிட்டுள்ளாராம். அப்படி நியமிக்கப்படும் பாடிகார்ட் ஆர்யானுக்கு நிழல் எப்போதும் கூடவே இருப்பாராம். எந்த கட்டுப்பாடுகள், தங்கு தடை இல்லாமல் ஆர்யான் எங்கு சென்றாலும் அவர் பின்தொடர்ந்து செல்வாராம்.

பதற்றத்தில் ஷாருக்கான்

பதற்றத்தில் ஷாருக்கான்

ஷாருக்கான் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், போதைப் பொருள் வழக்கில் இருந்து மகன் முழுவதுமாக மீண்டு வர வேண்டும் என ஷாருக்கான் இன்னமும் பதற்றத்தில் தான் இருக்கிறாராம். பாடிகார்ட் ஒருவர் எப்போதும் ஆர்யான் கான் உடன் இருந்து, அவரை கவனித்துக் கொண்டால் எல்லாம் நன்றாக நடக்கும் என ஷாருக்கான் நம்புகிறாராம். அதனால் ரவி சிங்கை போல் நம்பிக்கையான ஒரு பாடிகார்ட்டை தேடி வருகிறார்களாம்.

கோர்ட் கூறிய கருத்து

கோர்ட் கூறிய கருத்து

ஆர்யான் கான் தொடர்புடைய போதைப் பொருள் வழக்கில், வாட்ஸ்ஆப் சேட் மூலம் ஒருவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பார் என கூற முடியாது. வாட்ஸ்ஆப் சேட்டை போதிய ஆதாரமாக ஏற்க முடியாது என மும்பை ஐகோர்ட் நேற்று கூறி உள்ளது. இதனால் போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யான் கான் விரைவில் முழுவதுமாக வெளியில் வந்து விடுவார் என ஷாருக்கான் குடும்பத்தினர் நம்புகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X