மகன் ஆர்யான் பிறந்தநாளுக்கு ஷாருக்கான் வைத்துள்ள பிளான் என்னன்னு தெரியுமா ?

மும்பை : ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் தேசிய போதைப் பிரிவு போலீசாரால் அக்டோபர் 2 ம் தேதி கைது செய்யப்பட்டார். 25 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யான் கான், இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பை சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

மகன் கைது செய்யப்பட்ட பிறகு ஷாருக்கான் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். அவர் நடித்து வந்த படங்கள் மற்றும் விளம்பரங்களின் ஷுட்டிங்குகளை ரத்து செய்தார் ஷாருக்கான். தன்னை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம். போனில் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டார் ஷாருக்கான்.

 இரண்டு படங்களில் ஷாருக்கான்

இரண்டு படங்களில் ஷாருக்கான்

ஆர்யான் கான் கைது செய்யப்பட்ட சமயத்தில் டைரக்டர் அட்லீ இயக்கும் படம், ஏற்கனவே நடித்து வந்த பதான் ஆகிய படங்களில் நடித்து வந்தார். பதான் படத்தின் பாடல் ஷுட்டிங்கிற்காக ஸ்பெயின் செல்ல திட்டமிட்டிருந்த சமயத்தில் தான் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டார்.

நயன்தாரா விலகினாரா

நயன்தாரா விலகினாரா

ஷாருக்கான் - அட்லீ படம் தொடர்ந்து தாமதமாகி வருவதால் இந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகியதாகவும், அவருக்கு பதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் அட்லீ பேசி வருவதாகவும் தகவல் வெளியானது. தனது அக்டோபர் மாத கால்ஷீட் முழுவதும் வீணடிக்கப்பட்டு விட்டதாக நயன்தாரா அட்லீயிடம் புலம்பியதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட படக்குழு

பாதிக்கப்பட்ட படக்குழு

ஷாருக்கான் திடீரென ஷுட்டிங்கை ரத்து செய்ததால் தயாரிப்பாளர்கள், ஜுனியர் ஆர்டிஸ்ட்கள் என பலரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். சில காட்சிகளை, ஷாருக்கானை போன்ற உடல் அமைப்பை கொண்ட பிரஷாந்த் வால்டேவை வைத்து எடுத்து முடித்தார்கள். இருந்தாலும் பல ஜுனியர் ஆர்டிஸ்ட்கள் தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து தவித்தனர்.

ஷாருக்கானின் அடுத்த பிளான்

ஷாருக்கானின் அடுத்த பிளான்

தற்போது ஆர்யானுக்கு ஜாமின் கிடைத்து, வீடு திரும்பி உள்ளதால் மீண்டும் தனது படங்களின் வேலைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் ஷாருக்கான். லேட்டஸ்ட் தகவலின் படி, நவம்பர் 13 ம் தேதி ஆர்யான் கானின் பிறந்தநாளை கொண்டாடிய பிறகு ஷுட்டிங் வேலைகளை துவக்க ஷாருக்கான் திட்டமிட்டுள்ளாராம்.

முதலில் அட்லீ படம் தான்

முதலில் அட்லீ படம் தான்

முதலில் அட்லீ இயக்கும் படத்தில் தான் ஷாருக்கான் நடிக்க போகிறாராம். அந்த படத்தின் ஷுட்டிங் முழுவதுமாக முடிந்த பிறகே பதான் படத்தின் ஷுட்டிங்கை துவக்க போகிறாராம். அட்லீ இயக்கும் படத்தின் பெரும்பாலான பகுதிகள் மும்பையை சுற்றி தான் எடுக்கப்பட உள்ளதாம். அதனால் அதன் வேலைகளை முடித்து விட்டு, பிறகு வெளிநாடு ஷுட்டிங்கிற்காக செல்லலாம் என ஷாருக்கான் திட்டமிட்டுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X