பல மணிநேரம் காத்திருந்து மகனை அழைத்துச் சென்ற ஷாருக்கான்

மும்பை : ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதை பொருள் வழக்கில் சிக்கி, மூன்று வாரங்களாக மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பலமுறை ஜாமினுக்கு முயற்சித்து, ஒரு வழியாக தற்போது தான் ஆர்யானுக்கு ஜாமின் வழங்கி உள்ளது மும்பை ஐகோர்ட்.

அக்டோபர் 3 ம் தேதி முதல் மும்பை ஆர்துர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்யானுக்கு நேற்று ஜாமின் கிடைத்தது. இதனையடுத்து ஆர்யான் இன்று காலை 11 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

காத்திருந்த ஷாருக் தம்பதி

காத்திருந்த ஷாருக் தம்பதி

மகன் ஆர்யானுக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டதால் கடும் மனஉளைச்சலில் இருந்த ஷாருக்கானும், அவரது மனைவி கவுரி கானும் மகனை அழைத்துச் செல்ல சிறைக்கே நேரில் சென்றுள்ளனர். ஆர்யான் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு பல மணி நேரம் முன்பாகவே சிறை அருகில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் எடுத்து ஷாருக்கான், கவுரி கான், ஷாருக்கானின் பாடிகார்ட் ரவி சிங் ஆகியோர் தங்கி இருந்துள்ளனர்.

விருந்து கொடுத்த ஷாருக்கான்

விருந்து கொடுத்த ஷாருக்கான்

ஆர்யானுக்கு ஜாமின் கிடைத்து விட்டதாக உத்தரவு வந்ததுமே ஷாருக்கானின் வீடே விழாக்கோலம் பூண்டுள்ளதாம். மகனின் ஜாமினுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை வீட்டிற்கே அழைத்து விருந்து கொடுத்துள்ளாராம் ஷாருக்கான்.

Recommended Video

Shahrukh Khan மகன் Aryan Khan விடுவிக்கப்பட்டார் | Bail Granted, Mumbai Court
ஆர்யானுக்கு 14 கன்டிஷன்கள்

ஆர்யானுக்கு 14 கன்டிஷன்கள்

கோர்ட் விதித்த 14 கன்டிஷன்களுக்கும் ஒப்புக் கொண்ட பிறகு தான் கோர்ட் ஆர்யானுக்கு ஜாமின் வழங்க அனுமதி அளித்துள்ளது. மற்ற குற்றவாளிகள் யாரையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யக் கூடாது. மீடியாக்களிடம் பேசவோ, எந்த விதமான பேட்டி கொடுக்கவோ கூடாது. மீடியாக்களில் பேசி அனுதாபம் தேட எந்த முயற்சியும் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கன்டிஷன்களை தான் கோர்ட் போட்டுள்ளதாம்.

மீறினால் மீண்டும் ஜெயில்

மீறினால் மீண்டும் ஜெயில்

இந்த 14 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை ஆர்யான் கான் மீறினால் உடனடியாக ஆர்யானுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமின் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் கைது செய்யப்படுவார் என கோர்ட் கண்டிப்பாக கூறி உள்ளதாம். அதே சமயம் ஆர்யான் கான் மூன்று வாரங்களுக்கு பிறகு வீட்டிற்கு வருவதை கொண்டாட ஷாருக்கான் வீட்டில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X