அட பாவமே...ஷாருக்கான் இல்லாமல் நடக்கும் பட ஷுட்டிங்கள்

மும்பை : பாலிவுட் சூப்பர் ஹீரோவான ஷாருக்கான் தற்போது பதான், அட்லீ இயக்கும் படம், சில விளம்பர படங்களில் நடித்து வந்தார். ஜீரோ படத்திற்கு பிறகு ஷாருக்கான் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாததால் அடுத்து வெளியாக உள்ள பதான் படத்தை அவரது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பதான் படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய பாடல் காட்சிகள் மட்டும் தான் மீதமுள்ளதாம். மூன்று வாரங்கள் ஸ்பெயினில் ஷுட்டிங்கை நடத்தி முடித்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். தீபாவளிக்கு அல்லது புத்தாண்டிற்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்களாம்.

ஷுட்டிங் செல்லாத ஷாருக்கான்

ஷுட்டிங் செல்லாத ஷாருக்கான்

ஆனால் எதிர்பாராத விதமாக போதை பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதிலிருந்து ஷுட்டிங் செல்வது உள்ளிட்ட சினிமா தொடர்பான அனைத்து வேலைகளையும் ஷாருக்கான் நிறுத்தி விட்டாராம். இதனால் பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

மகனுக்காக போராடும் ஷாருக்

மகனுக்காக போராடும் ஷாருக்

சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்தியதாக ஆர்யான் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமினில் எடுக்க ஷாருக்கான் பல வகைகளிலும் முயற்சித்து பார்த்து விட்டாராம். ஆனால் ஆர்யானை வெளியில் விட தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் மகனை வெளியில் கொண்டு வர முடியாமலும், அனைவரும் விசாரிப்பதால் வெளியில் தலை காட்ட முடியாமலும் தவித்து வருகிறாராம் ஷாருக்கான்.

ஷாருக் இல்லாமல் ஷுட்டிங்

ஷாருக் இல்லாமல் ஷுட்டிங்

இதனால் ஷாருக்கானால் எந்த வேலையும் தடை பட வேண்டாம் என கூறி உள்ளாராம் ஷாருக்கானை போலவே உடல் தோற்றத்தில் இருக்கும் பிரஷாந்த் வால்டே. அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், அட்லீ இயக்கும் படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. அதே போல் மற்ற விளம்பர படங்களின் ஷுட்டிங்கும் தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.

அவருக்கு பதில் இவரா

அவருக்கு பதில் இவரா

கடந்த 20 நாட்களாக இந்த ஷுட்டிங்களில் ஷாருக்கானுக்கு பதில், பிரஷாந்த் தான் நடித்து வருகிறாராம். சமீபத்தில் நடந்த பிரச்சனைகளால் எதையும் மாற்ற வேண்டாம் என்பதற்காக தான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்களாம். சில விளம்பர மற்றும் படங்களின் ஷுட்டிங் ஷாருக்கான் இல்லாமலேயே நடந்து வருகிறதாம். அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் தவிர்த்த மற்ற காட்சிகளை எடுத்து வருகிறார்களாம்.

ஷுட்டிங்கில் மாற்றம்

ஷுட்டிங்கில் மாற்றம்

இது பற்றி பிரஷாந்த் கூறுகையில், லாக்டவுனிற்கு பிறகு பல பிரச்சனைகளை தாண்டி மீண்டும் வேலைகளை துவக்கி உள்ளோம். தற்போதுள்ள இக்கட்டான சூழலில் வேலைகளை நிறுத்தச் சொல்லி நாங்கள் யாரையும் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. அட்லீ இயக்கும் படத்திற்காக தென்னிந்தியாவை சேர்ந்த ஒட்டுமொத்த டீமும் இங்கு வந்துள்ளது. அதனால் வேலையை நிறுத்த முடியாது என்பதால் தான் சில மாற்றங்களை செய்து ஷுட்டிங்கை நடத்தி வருகிறோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X