காதலியின் கைகளில் கடைசி மூச்சை விட்ட நடிகர் சித்தார்த் சுக்லா.. வெளியான கலங்க வைக்கும் தகவல்!

மும்பை: காதலியின் கைகளிலேயே நடிகை சித்தார்த் சுக்லா கடைசி மூச்சை விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 13 Title Winner திடீர் மரணம் | Sidharth Shukla

பிக்பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான சித்தார்த் சுக்லா நேற்று காலை அவரது படுக்கையில் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மருத்துவரை வரவழைத்து பரிசோதித்தனர். இதில் சித்தார்த் சுக்லா ஏற்கனவே மரணமடைந்தது தெரியவந்தது.

காதலியின் கைகளில் கடைசி மூச்சு

காதலியின் கைகளில் கடைசி மூச்சு

இந்நிலையில் நடிகர் சித்தார்த் சுக்லா தனது கடைசி மூச்சை தனது காதலியின் கைகளிலேயே விட்டதாக ஈடைம்ஸ் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. தனது காதலர் தனது அருகில் இருக்கும் போதே உயிரை விட்டதால் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் ஷெனாஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நிலை சரியில்லை

உடல்நிலை சரியில்லை

அதாவது, செப்டம்பர் 2 ம் தேதி மாரடைப்பால் காலமான நடிகர் சித்தார்த் சுக்லா, இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். நடிகர் சித்தார்த் சுக்லா இரவு 9:30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

நிம்பு பாணி ஐஸ்க்ரீம்

நிம்பு பாணி ஐஸ்க்ரீம்

அந்த நேரத்தில் அவரது தாயார் மற்றும் ஷெனாஸ் இருவரும் வீட்டில் இருந்தனர். முதலில் அவர்கள் அவருக்கு நிம்பு பாணியும் பின்னர் ஐஸ்கிரீமும் கொடுத்துள்ளனர். ஆனால் அது அவருக்கு உதவவில்லை. சித்தார்த் இன்னும் உடல்நிலை சரியாகவில்லை என கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது தாயும் ஷெனாஸும் அவரை ஓய்வெடுக்குமாறு கூறியுள்ளனர்.

முதுகில் தட்டிக் கொடுத்த காதலி

முதுகில் தட்டிக் கொடுத்த காதலி

ஆனால் சித்தார்த்துக்கு தூக்கம் வராததால் ஷெஹ்னாஸை தன்னுடன் இருக்கச் சொல்லி அவருடைய முதுகில் தட்டி கொடுக்குமாறு கூறியுள்ளார். அதிகாலை 1:30 மணியளவில், சித்தார்த் ஷெனாஸின் மடியிலேயே தூங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவரை மெதுவாக விலக்கி அருகில் படுக்க வைத்துள்ளார் ஷெனாஸ்.

சித்தார்த் அசையவே இல்லை

சித்தார்த் அசையவே இல்லை

மேலும் ஷெனாஸும் சித்தார்த் சுக்லாவின் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார். காலை 7 மணியளவில் ஷெனாஸ் எழுந்தபோது, ​​சித்தார்த் எப்படி படுக்க வைக்கப்பட்டாரோ அதே பொஸிஷனிலேயே படுத்துள்ளார். சித்தார்த் எந்த அசைவும் இல்லாமல் தூங்குவதைப் பார்த்த ஷெனாஸ் சித்தார்த்தை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் சித்தார்த் அசையவே இல்லை.

ஏற்கனவே மரணமடைந்துவிட்டார்

ஏற்கனவே மரணமடைந்துவிட்டார்

இதனால் அச்சமடைந்த ஷெனாஸ் 12 வது மாடியில் இருந்து 5 வது மாடியில் இருந்த அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். மேலும் ஷெனாஸ் சித்தார்த்தின் சகோதரிக்கும் தகவல் கூறியுள்ளார். அவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரை அழைத்து பரிசோதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்தார்த் சுக்லா ஏற்கனவே மரணமடைந்து விட்டதை உறுதி செய்தனர்.

பெரும் அதிர்ச்சியில் ஷெனாஸ்

பெரும் அதிர்ச்சியில் ஷெனாஸ்

இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டு சித்தார்த் சுக்லா உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். பாலிகா வடு நடிகரின் திடீர் மறைவால் ஷெனாஸ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். ஷெனாஸ் சித்தார்த்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்.

அக்கறை காட்டினார்.. விலகியது இல்லை..

அக்கறை காட்டினார்.. விலகியது இல்லை..

ஷெனாஸ் சித்தார்த்திடம் தன் அன்பை அடிக்கடி வெளிப்படையாகக் காட்டினார். ஷெனாஸ், சித்தார்த்திடம் இருந்து அக்கறை காட்டுவதை விட்டு விலகியதில்லை. ஷெனாஸ் சித்தார்த்தை காதலிப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். பிக்பாஸ் 13 க்குப் பிறகு அவர்களின் ஜோடி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

இன்று மாலை இறுதிச்சடங்கு

இன்று மாலை இறுதிச்சடங்கு


மேலும் அவர்கள் இருவரையும் ரசிகர்கள் சித்னாஸ் என்றே அழைத்து வந்தனர். இந்த
வதந்தி ஜோடி சமீபத்தில் பிக் பாஸ் OTT மற்றும் டான்ஸ் தீவானே 3 ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளில் தோன்றி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனிடையே பிரேத பரிசோதனை முடிந்து சித்தார்த் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை முன்பு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சித்தார்த் சுக்லாவின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X