நோட்டீஸ் அனுப்புவேன்... ஹுமா குரேஷியை மிரட்டிய சோனாக்ஷி சின்ஹா...ஏன் என்னாச்சு ?
மும்பை : பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளாகவும், பிஸியான நடிகைகளாகவும் இருப்பவர்கள் ஹுமா குரேஷியும், சோனாக்ஷி சின்ஹாவும். இப்போது அவர்கள் இருவரிடையே மோதல் வெடித்துள்ளது பாலிவுட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அக்ஷய் குமாருடன் பெல்பாட்டம் படத்தில் நடித்து முடித்துள்ள ஹுமா குரேஷி, சமீபத்தில் தான் அஜித், கார்த்திகேயா நடித்துள்ள வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் ஹுமா குரேஷி நடித்துள்ளார். 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ரிலீசாக உள்ளது.
அதே சமயம் சோனாக்ஷி சின்ஹாவும் காமெடி பேய் டமான Kakuda படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் ரித்திஷ் தேஷ்முக், ஷாகிப் ஷலீம் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஹுமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா பேய் மாஸ்க் அணிந்திருக்கும் ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்து, Happy Halloween என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இந்த ஃபோட்டோவை ஏராளமானோர் லைக் செய்து, கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால் இந்த ஃபோட்டோவை பார்த்து கடுப்பான சோனாக்ஷி சின்ஹா, எக்ஸ்க்யூஸ் மீ. எதற்காக என் அனுமதி இல்லாமல் என்னுடைய ஃபோட்டோவை பதிவிட்டுள்ளீர்கள். வேண்டுமானால் உங்களின் ஃபோட்டோவை பதிவிட வேண்டியது தானே என கருத்து பதிவிட்டுள்ளார்.
மேலும் ஹுமா குரேஷி பதிவிட்ட ஃபோட்டோவை மீண்டும் ஷேர் செய்த சோனாக்ஷி, உங்களின் சொந்த கருத்தை சொல்ல எனது ஃபோட்டோவை பதிவிடுவதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் நான் சட்டப்படி நோட்டீஸ் அனுப்புவேன் என கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.
இவர்களின் மோதலை பார்த்து விட்டு சிலர் ஹுமா குரேஷிக்கு ஆதரவாகவும், சிலர் சோனாக்ஷி சின்ஹாவிற்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் ஜாலிக்காக ஹுமா குரேஷி செய்ததை ஏன், சோனாக்ஷி இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்கிறார் என கேட்டுள்ளனர். இந்த குழப்பத்தால் யார் பக்கம் பேசுவது என தெரியாமல், பாலிவுட்டில் பலர் குழப்பத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











