twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனைவியின் விருப்பமின்றி கணவன் வலுக்கட்டாயப்படுத்தினால் அது பலாத்காரமாகாதா? கொதித்தெழுந்த டாப்சி

    |

    மும்பை: மனைவியை கணவர் பொது வெளியில் அறைந்ததற்காகவே கொதித்தெழுந்து விவாகரத்து கேட்கும் தப்பட் படத்தில் நடித்த டாப்சி இந்த விவகாரத்தில் சும்மா இருப்பாரா என்ன?

    சத்தீஸ்கர் நீதிமன்றம் வழங்கியுள்ள இப்படியொரு தீர்ப்பு நாட்டில் பல பெண்கள் மத்தியில் எரிச்சலை கிளப்பி இருக்கிறது.

    மனைவியின் விருப்பம் இல்லாமல் அவரை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது பலாத்காரம் ஆகாது என நீதிபதி கூறிய கருத்துக்கு எதிராக நடிகை டாப்சி மற்றும் சில பாலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    திரையில் 10 ஆண்டுகளை கடந்த ஆடுகளம் நாயகி... தயாரிப்பாளராகிறார் டாப்சி திரையில் 10 ஆண்டுகளை கடந்த ஆடுகளம் நாயகி... தயாரிப்பாளராகிறார் டாப்சி

    கணவர் கட்டாயப்படுத்துகிறார்

    கணவர் கட்டாயப்படுத்துகிறார்

    சத்தீஸ்கரில் இளம் பெண் ஒருவர் வரதட்சனை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாகவும், தனக்கு விருப்பம் இல்லாத நிலையிலும், தன்னை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்கிறார் என்றும் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சத்தீஸ்கர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

    பலாத்காரமாகாது

    பலாத்காரமாகாது

    இந்திய சட்டப்படி திருமணம் ஆன கணவன் மனைவியுடன் எப்படி உடல் உறவு கொண்டாலும் அது பலாத்காரம் ஆகாது. மனைவிக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கணவருக்கு உடலுறவு கொள்ள உரிமை உண்டு எனக் கூறி உள்ளது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

    மாற்ற வேண்டும்

    மாற்ற வேண்டும்

    சட்டத்தில் இது தொடர்பாக சரியான ஒரு திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என பலரும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்பும் இதே போல பல வழக்குகளில் இதே போன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டு அது விவாதத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    டாப்சி சாடல்

    சத்தீஸ்கர் நீதிமன்றத்தில் அண்மையில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை அறிந்து அதிர்ச்சியடைந்த நடிகை டாப்சி "இதை மட்டும் தான் இன்னும் கேட்காமல் இருந்தேன்" என ட்வீட் போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். முற்போக்கு சிந்தனைகள் கொண்ட பல படங்களில் நடிகை டாப்சி நடித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அவர் தனது கருத்தை எடுத்து உரைத்திருக்கிறார்.

    நோ மீன்ஸ் நோ

    நோ மீன்ஸ் நோ

    பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடித்திருந்தார் நடிகை டாப்சி. அந்த படம் தமிழில் தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்றும் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது. அதில், விலை மாதுவாக இருந்தாலும் விருப்பம் இல்லாமல் ஒரு ஆண் தொடக் கூடாது என்பதை "நோ மீன்ஸ் நோ" எனும் வசனம் மூலம் அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பார்கள்.

    கணவன் எப்படி கை நீட்டலாம்

    கணவன் எப்படி கை நீட்டலாம்

    பிங்க் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான டாப்சியின் தப்பட் திரைப்படத்தில் பலர் கூடியிருக்கும் நிகழ்ச்சியில் தன்னை கை நீட்டி அறையும் கணவனை எதிர்த்து மனைவி விவாகரத்து கேட்கும் கதையில் நடித்து அசத்தி இருப்பார் நடிகை டாப்சி.

    பாடகி சோனா

    பாடகி சோனா

    நடிகை டாப்சியை தொடர்ந்து பாடகி சோனா மொஹபத்ராவும் இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் போட்டுள்ளார். "The sickness I feel reading this #India is beyond anything I can write here." என இந்த மனநோய் மாற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சில பிரபலங்களும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    தண்டனை இருக்கு

    தண்டனை இருக்கு

    ஆனாலும், இந்த வழக்கில் பெண்ணை வன் கொடுமை செய்த புகாரின் அடிப்படையில் பிரிவு எண் 498A மற்றும் 377 பிரிவுகளின் கீழ் மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது. மனைவியின் விருப்பத்தை மீறி கணவன் உடலுறவு செய்யக் கூடாது என்பதை சட்டமாக்க வேண்டும் என்பது தான் இதற்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களின் நோக்கமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bollywood celebrities like Taapsee and Sona Mohapatra reacts over Chhattisgarh High Court statement over Married Couple rape case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X