ஷாருக்கான், அட்லீ பட தலைப்பு இதுதான்.. டபுள் ரோலில் டபுள் ட்ரீட்!

சென்னை : பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில், நயன்தாரா,பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான்

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான்

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் 2018ம் ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியானது. திட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஷாருக்கானின் எந்த திரைப்படங்களும் வெளியாகாததால் அவரின் படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

அட்லீயின் பாலிவுட் கனவு

அட்லீயின் பாலிவுட் கனவு

பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்துள்ள அட்லி ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். 2020ம் ஆண்டு இப்படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் கொரோனாவின் தாக்கம், ஷாருக்கானின் மகன் ஆர்யா கான் போதை வழக்கில் கைது செய்யப்பட்டது என பல பிரச்சனை காரணமாக படம் தாமதமாகிக் கொண்டே சென்றன. ஒரு கட்டத்தில் அட்லீயின் பாலிவுட் கனவு தகர்ந்து விட்டதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின.

பாடத்தின் தலைப்பு

பாடத்தின் தலைப்பு

தற்போது, அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படத்தின் படப்பிடிப்பு சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இப்படத்திற்கு 'லயன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு 'ஜவான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் டீஸர் தயாராகி அதற்கான சென்சார் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், அதில் இருந்து கசிந்த தகவலின் படி தான் இந்த படத்தின் தலைப்பு 'ஜவான்' என்றும் கூறப்படுகிறது.

மிரட்டலான டீசர்

மிரட்டலான டீசர்

அதுமட்டுமில்லாமல், படத்தின் டீசர் ஷாருக்கான் ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும் என்றும், 1 நிமிடம் 34 வினாடிகள் ஓடக்கூடிய டீசரில் ஷாருக்கான் மிரட்டி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், ஷாருக்கானின் ரசிகர்கள் டீசரை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். டீசர் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

இப்படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷாருக்கானின் முதல் கேரக்டர் கேங்க்ஸ்டாராகவும், மற்றொருவர் 'ரா' பிரிவு அதிகாரியாக நடித்துள்ளதாக பாலிவுட்டில் சினிமாவட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இப்படம் 2023ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

இந்த படத்தைத் தொடர்ந்து, அமீர் கானின் லால் சிங் சத்தா படத்திலும், ரன்வீர் கபீர், ஆலியாபட் நடிக்கும் பிரம்மாஸ்திரம் ஆகிய இருபடங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், பதான்,டைகர் 3, டுங்கி போன்ற திரைப்படக்களை கைவசம் வைத்து இருக்கிறார். இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X