படுக்கைக்கு அழைக்கும் பெண்கள் பெண்களே அல்ல.. ஷாக் கொடுத்த சக்திமான் நடிகர் முகேஷ் கன்னாவின் பேச்சு!

மும்பை: சக்திமான் தொடரில் முகேஷ் கன்னா சக்திமானாக ஏகப்பட்ட அட்வைஸ்களை குழந்தைகளுக்கு கொடுப்பார்.

அதே போல இப்போதும் அவர் தனது யூடியூப் சேனலில் ஒரு அட்வைஸை ஆண்களுக்கு கொடுத்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

படுக்கைக்கு அழைக்கும் பெண்கள் பெண்களே அல்ல என பேசியுள்ளார் முகேஷ் கன்னா.

சக்திமான் ஹீரோ

சக்திமான் ஹீரோ

மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடித்த முகேஷ் கன்னா சக்திமான் தொடர் மூலம் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் சூப்பர் ஹீரோவாக மாறினார். இப்போதும் சக்திமானுக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால், அதில் நடித்த முகேஷ் கன்னாவுக்கு ரசிகர்கள் குறைந்து பலரும் அவரை ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளனர். அடிக்கடி சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துக்களை பேசி டிரெண்டாகி விடுகிறார் முகேஷ் கன்னா.

படுக்கைக்கு அழைத்தால்

படுக்கைக்கு அழைத்தால்

இளைஞர்களை சமூக வலைதளங்களில் பெண்கள் வசியப்படுத்தி வருகின்றனர் என்றும், படுக்கைக்கு அழைத்தால் அவர்கள் பெண்களே இல்லை, செக்ஸ் ஒர்க்கர்கள் என்றும் அதிரடியாக தனது அட்வைஸை கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் முகேஷ் கன்னா. அவருக்கு எதிரான ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

எனக்கே வலை விரிக்கிறாங்க

எனக்கே வலை விரிக்கிறாங்க

அத்துடன் நிறுத்தாமல், இந்த வயதில் எனக்கே இளம் பெண்கள் இலவச செக்ஸ் ஆசை காட்டி வலை விரிக்கின்றனர். சோஷியல் மீடியாவை இளைஞர்கள் தவறான வழியில் பயன்படுத்தி வருகின்றனர். இளம் பெண்கள் பசங்களை ஏமாற்றி காசு பறித்து வருகின்றனர் என அவர் பேசி உள்ளார்.

பெண்களுக்கு எதிராக

பெண்களுக்கு எதிராக

சக்திமான் நடிகர் முகேஷ் கன்னா யூடியூப் ஆரம்பித்து தொடர்ந்து தனக்கு தோன்றும் கருத்துக்களை பேசி வருகிறார். இந்நிலையில், அவரது இந்த பேச்சு, பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களை வேண்டுமென்றே இழிவாக பேசுகிறார் முகேஷ் கன்னா என்றும் ஆண்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்ல, வலை விரித்ததும் வந்து விழுந்து ஏமாந்து போக, பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் தான் நாள்தோறும் இந்தியாவில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது என இளம் பெண்கள் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சக்திமான் படம் எப்போ வரும்

சக்திமான் படம் எப்போ வரும்

முகேஷ் கன்னாவின் பீஷ்ம் இண்டர்நேஷனல் உடன் இணைந்து சோனி நிறுவனம் முன்னணி ஹீரோவை வைத்து சக்திமான் படத்தை 3 பாகங்களாக எடுக்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்த நிலையில், அந்த படம் எப்போதான் ஆரம்பிக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X