திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு விக்கி மற்றும் கத்ரீனா எங்கே போக போறாங்க தெரியுமா?

மும்பை: ராஜஸ்தானில் ராஜா வீட்டுத் திருமணம் போல 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் பிரம்மாண்டமாக அரங்கேறி வருகிறது நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கெளஷலின் திருமண வைபவம்.

நேற்று சங்கீத் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இன்று மெஹந்தி நிகழ்ச்சிக்காக மருதாணி பூசி தயாராகி வருகிறார் மணப்பெண் கத்ரீனா கைஃப்.

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு இருவரும் எங்கே ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்த ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது.

மெகா திருமணம்

மெகா திருமணம்

பாலிவுட் திரையுலகின் மெகா திருமணமாக நடிகர் விக்கி கெளஷல் மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் திருமணம் நாளை ராஜஸ்தானில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் நடைபெறுகிறது. டிசம்பர் 7ம் தேதியான நேற்று சங்கீத் கச்சேரியுடன் தொடங்கிய திருமண வைபவம் இன்று மெஹந்தி நிகழ்ச்சியை கொண்டாட தயாராகி வருகிறது.

உச்சகட்ட பாதுகாப்பு

உச்சகட்ட பாதுகாப்பு

பாலிவுட்டின் வெகு சில முன்னணி நடிகர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உச்சகட்ட பாதுகாப்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் யாரும் மொபைல் போன், கேமரா உள்ளிட்ட எதையும் பயன்படுத்தக் கூடாது என சொல்லி உள்ள நிலையில், எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகவில்லை.

கத்ரீனா கைகளில் மருதாணி

கத்ரீனா கைகளில் மருதாணி

மெஹந்தி நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று காலை முதல் நடிகை கத்ரீனா கைஃப் கைகளுக்கு மருதாணி போடும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமண வைபவ புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக விக்கி மற்றும் கத்ரீனாவே விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹனிமூன் எங்கே

ஹனிமூன் எங்கே

திருமணம் முடிந்த கையோடு மாலத்தீவுக்கு ஹனிமூன் செல்ல நட்சத்திர தம்பதியினர் இருவரும் திட்டமிட்டுள்ளதாகவும் சொகுசு ரெசார்ட் ஒன்றை இவர்கள் புக் செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இவர்கள் ஹனிமூன் அதிக நாட்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

ஷூட்டிங் இருக்கு

ஷூட்டிங் இருக்கு

சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் டைகர் 3 படத்தின் ஷூட்டிங்கில் நடிகை கத்ரீனா கைஃப் விரைவில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற சூழலும் சாம் பகதூர் படத்தின் படப்பிடிப்பில் விக்கி கெளஷலும் இம்மாதமே கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஹனிமூன் பிளானையே மாற்றவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X