Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இன்ஸ்டாகிராமில் மனைவிக்கு கொலை மிரட்டல்..பிரபல நடிகையின் கணவர் போலீசில் புகார்!
மும்பை : பிரபல நட்சத்திர தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கேத்ரீனா கைஃப். இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் 2003ஆம் ஆண்டு வெளியான 'பூம்' படத்தின் மூலம் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார். தொடர்ந்து ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகப் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
5
மொழிகள்..2500
தியேட்டர்கள்..தட்டி
தூக்க
போகும்
“தி
லெஜண்ட்“..மாஸ்
என்ட்ரினா
இதுதான்!
இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான விக்கி கவுஷலை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பஞ்சாபி முறைப்படி விக்கி கவுஷல் - கேத்ரீனா கைஃப் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது. இவர்களது திருமணத்தில பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில், பாலிவுட் நட்சத்திரங்களான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் தம்பதியினருக்கு சமூக ஊடகங்களில் மர்ம நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் விக்கி கௌஷல் புகார் அளித்துள்ளார். நடிகர் விக்கி கவுஷல் அளித்த புகாரில்,மர்ம நபர் தனது மனைவியைப் பின்தொடர்ந்து பல நாட்களாக இன்ஸ்டாகிராமில் மிரட்டி வருவதாக புகார் கூறியுள்ளார்.
நடிகர் விக்கி கௌஷலின் புகாரின் அடிப்படையில், சான்டாக்ரூஸ் போலீசார் அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் மீது ஐபிசியின் பிரிவுகள் 506(2),354(டி) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மும்பை சாந்தாகுரூஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வரும் கத்ரினா தற்போது கை வசம் மெர்ரி கிறிஸ்துமஸ், டைகர் 3, போன் பூட் ஆகிய படங்களை வைத்துள்ளார். அதேபோன்று, அவரது கணவர் விக்கி கெளசல், கோவிந்தா நாம் மேரா, ரெளலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.