Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஷாருக்கானின் ‘ஜவான்‘ படத்தில் விஜய்யா?..பாலிவுட்டில் கால் பதிக்கும் விஜய்!
சென்னை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில், நயன்தாரா,பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷாருக்கன் மற்றும் அவரது மனைவி கௌரி கானின் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
தமிழ்
பொண்ணு..
தமிழிலேயே
பேசலாம்ல்ல..
ஐஸ்வர்யா
ராஜேஷ்
பேசிய
ஆங்கிலத்தால்
கடுப்பான
ரசிகர்கள்!

ஷாருக்கான்
பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியானது. திட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஷாருக்கானின் எந்த திரைப்படங்களும் வெளியாகாததால்,ஷாருக்கானின் திரைப்படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். ஷாருக்கான் மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1ந் தேதி வெளியாக உள்ளது.

இயக்குநர்
பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்துள்ள அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். 2020ம் ஆண்டு இப்படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் கொரோனாவின் தாக்கம், ஷாருக்கானின் மகன் ஆர்யா கான் போதை வழக்கில் கைது செய்யப்பட்டது என பல பிரச்சனை காரணமாக படம் தாமதமாகிக் கொண்டே சென்றன. ஒரு கட்டத்தில் அட்லீயின் பாலிவுட் கனவு தகர்ந்து விட்டதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின.

மிரட்டலான டீசர்
இதையடுத்து, ஜவான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் மிரட்டியது. அந்த டீசரில், ஷாருக்கான் முகத்தை பாதி மூடிய நிலையில் ரத்தக் காயங்களுடன் பழமையான இடத்தில் ஆக்ஷனுக்கு தயாராவது போன்ற டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி இருந்தது. மேலும், அடுத்த ஆண்டு வருடம் ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக இப்படம் வெளியாக உள்ளது.

இரட்டை வேடத்தில்
இப்படத்தில் ஷாருக் மற்றும் நயன்தாராவைத் தவிர சன்யா மல்ஹோத்ராவும் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தில், நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார், அதே நேரத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகனாக ஒரு கதாபாத்திரத்திலும் கேங் ஸ்டாராக மற்றொரு வேடத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார்.

விஜய் நடிக்கிறாரா?
இந்நிலையில், ஜவான் திரைப்படம் குறித்த சுவாரசியமானத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் தளபதி விஜய் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய்க்கு அட்லி மிகவும் நெருக்கமானவர் என்பதும் அவருடைய மூன்று ஹிட் படங்களின் இயக்குனர் என்ற நட்பு காரணமாக இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க விஜய்யிடம் அட்லி கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.