அழகு கொஞ்சும் காஷ்மீரின் சோகத்தை சொன்ன… ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்‘ விரைவில் தமிழில் !
காஷ்மீர் : விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தமிழ் மொழியில் விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' அனைத்து முரண்பாடுகளையும் மீறி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் குறைந்த ப்ரோமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தபோதிலும், காஷ்மீர், மும்பை, டெல்லி, மற்றும் கிழக்கு பஞ்சாப் ஆகிய இடங்களிலிருந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக்குவித்துள்ளது.
"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 4 நாட்களாகி உள்ள நிலையில், ரூ.15.10 கோடியை வசூல் செய்தது. அனுபம் கெர் மற்றும் மிதுன் சக்ரவர்த்தி நடித்துள்ள இப்படம் 1990 ஆம் ஆண்டு காஷ்மீர் கிளர்ச்சியின் போது நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீரி பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியதே இப்படத்தின் கதையாகும். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சோகம் கரைபுரண்டு ஓடுகிறது. அழகு கொஞ்சும் காஷ்மீரின் கண்ணீர் கதையை மனதை உலுக்கும் வகையில் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி உள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறும் புஷ்கருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது? குடும்பத்தை பலி கொடுத்த கிருஷ்ணா தனது குடும்பத்தின் படுகொலை பற்றிய உண்மையைக் கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார். கிருஷ்ணாவின் பயணம் மற்றும் அவரது குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையைக் கண்டறியும் கதை. தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பல காட்சிகளில் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இந்த திரைப்படத்தை தமிழ் மொழியில் விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











