Don't Miss!
- News
ரயில்வேக்கு மொத்தமாக அள்ளிக் கொடுத்த நிர்மலா.. 2013-14 பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிக ஒதுக்கீடு
- Finance
பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.79000 கோடி ஒதுக்கீடு.. சாமானியர்கள் ஹேப்பி!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“ஜாக்கிசான் எனக்கு இந்த உறவுமுறை தான்”: உண்மையை போட்டுடைத்த மல்லிகா ஷெராவத்!
மும்பை: ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் உடனான உறவுமுறை குறித்து பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மனம் திறந்துள்ளார்.
ஜாக்கிசான் எனக்கு மூத்த சகோதரனைப் போல, அவர் தான் ஹாலிவுட்டில் அறிமுகமாக அனைத்து கதவுகளையும் திறந்துவிட்டார் என மல்லிகா ஷெராவத் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
எனது நடிப்புத் திறமையை நம்பியே ஜாக்கிசான் தன்னை ஹாலிவுட்டில் நடிக்க வைத்தார் என்று மல்லிகா ஷெராவத் குறிப்பிட்டுள்ளார்.
மல்லிகா ஷெராவத் நடித்துள்ள RK/RKay என்ற திரைப்படம் நாளை (22ம் தேதி) வெளியாகிறது. இத்திரைப்படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜத் கபூர் இயக்கி நடித்துள்ள இப்படத்தில், ரன்வீர் ஷோரி, குப்ரா சேட், மனு ரிஷி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா உட்பட, பல்வேறு திரைப்பட விழாக்களிலும் RK/RKay திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரில்
சரக்கடித்த
ஷாருக்கான்
மகன்..
பங்கமாக
கலாய்த்த
நெட்டிசன்கள்..
நடிகை
கஸ்தூரி
ஆதரவு
ட்வீட்!

ரிமா லம்பா டூ மல்லிகா ஷெராவத்
இந்த நிலையில், தனது 20 ஆண்டுகால திரையுலக பயணம் குறித்து மனம் திறந்துள்ள மல்லிகா ஷெராவத், பல சுவாரஸ்யமான விஷயங்களையும் தெரிவித்துள்ளார். ரிமா லம்பா என்ற இயற்பெயருடைய மல்லிகா ஷெராவத் சினிமாவில் அறிமுகமாகும் போது, தனக்கு யாரும் உதவி செய்யவில்லை என வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

கவர்ச்சியா நடிச்சா என்னாவாம்?
குறிப்பாக 'மர்டர்' படத்தில் கவர்ச்சியாக நடித்ததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தேன் என குறிப்பிட்டுள்ளார். கவர்ச்சியாக நடித்துவிட்டால் வாய்க்கு வந்தபடி பேசுவதெல்லாம் என்னதான் நியாயமோ? எனக் கேள்வியெழுப்பியுள்ள அவர், பெண்கள் என்னை வெறுப்புடன் அணுகியது அதிர்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பீச்ல அப்படித்தான் இருப்பேன்
தனக்கு பெண்களை விடவும் ஆண்களை மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ள மல்லிகா ஷெராவத், பீச்சில் பிகினியோடு இருந்தது என் விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமா! "இப்படி அழகான உடம்பை வச்சுகிட்டு பீச்ல சேலை கட்டிட்டா வலம்வர முடியும்" என விமர்சனங்கள் செய்தவர்களை ஒரே போடாக போட்டுள்ளார்.

ஜாக்கிசான அப்படித்தான் கூப்டுவேன்
ஹாலிவுட்டில் 'தி மித்' படத்தின் மூலம் ஜாக்கிசானுடன் இணைந்து நடித்தது குறித்தும் சூப்பரான தகவல்களை ஷேர் செய்துள்ளார் மல்லிகா ஷெராவத். ஜாக்கிசான் எப்பவுமே எனக்கு பெரிய அண்ணன் மாதிரி, அவர் தான் ஹாலிவுட்டின் அனைத்து கதவுகளையும் திறந்து தனக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் மல்லிகா ஷெராவத் கூறியுள்ளது பலரையும் வாயடைக்கச் செய்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் வீடு
'தி மித்' படத்தில் நடித்த பின்னர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீடு வாங்கினார் மல்லிகா ஷெராவத். இதற்கும் ஜாக்கிசான் தான் தனக்கு உதவியதாகக் கூறி, பல வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவர். ஆடிசன் மூலமே தனது திறமைக்கு ஜாக்கிசான் மதிப்பளித்ததாகவும், இதுபற்றி பாலிவுட் நடிகைகள் கட்டிவிட்ட கதைகள் எல்லாம் பொய்யென்றும் அவர் தெரிவித்துள்ளார்.