Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 05 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் விடா முயற்சிக்கான வெற்றியை பெற போகிறார்கள்...
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அழிவில்லா கடவுள்..அவதார் தி வே ஆப் வாட்டர்..காந்தாரா ஓரம்போ.. மதுரையை கலக்கும் போஸ்டர்!
மதுரை : அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள நிலையில், அவதார் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் மதுரையில் போஸ்டரை ஒட்டி ரசிகர்கள் அலப்பறை கொடுத்துள்ளனர்.
அவதார் படத்தின் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
இதன்பின் சுமார் 13 ஆண்டுகள் கழித்து, ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 160 மொழிகளில் வெளியாகி உள்ளது.
Avatar 2 Review: ஜேம்ஸ் கேமரூனின் ப்ளூ மேஜிக் மீண்டும் கை கொடுத்ததா? அவதார் 2 விமர்சனம்!

அவதார்: தி வே ஆப் வாட்டர்
அவதார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்தது. இப்படத்தின் கதை முழுக்க முழுக்க தண்ணீருக்கு அடியில் நடப்பதால், படத்திற்காக பிரத்யேக படகுகள், கப்பல்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன.

சவுண்ட் எஃபெக்ட் சூப்பர்
சுமார் 16 ஆயிரம் கிலோ எடையிலான 360 டிகிரி இயக்கக் கட்டுப்பாட்டுத் தளம் அமைக்கப்பட்டு இந்த படம் எடுக்கப்பட்டது. 3டி, 4K மற்றும் 48 Frames Per Second என்ற மூன்று தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய இந்த படத்தை அதற்கு ஏற்ப கிரிஸ்டல் க்ளியரான பிரைட்னஸாக விஷூவல், ஐ மேக்ஸ் தரக்கூடிய ஸ்பீக்கர்கள் படத்தின் துல்லியமான சவுண்ட் எஃபெக்ட் திரையரங்கை அலறவிட்டது.

முன்னணி நடிகர்கள்
டைட்டானிக் படத்தில் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் என பலரும் அதில் நடித்துள்ளனர். கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஒரே மைனஸ் இதுதான்
படம் தாங்கள் எதிர்பார்த்ததை விட ஆழ்கடல் காட்சிகள் கண்களையும், மனதையும் வியப்பில் ஆழ்த்திவிட்டதாக கூறி ரசிகர்கள் இணையத்தில் #Avatar2 ஹாஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். படம் 3 மணி நேரமாக இருப்பதால், இதுதான் படத்தில் இருக்கும் ஒரே மைனஸ் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, நெட்டிசன்கள் படத்தில் பயன்படுத்தப்பட்ட விஎஃப்எக்ஸ் பற்றி பாராட்டி பேசி வருகிறார்கள்.

கடவுளின் அவதாரம்..காந்தாரா ஓரம்போ
இந்நிலையில், போஸ்டர் அடித்து பழகிப்போன நம்ம மதுரை ரசிகர்கள் அவதார் 2 திரைப்படத்திற்கும் போஸ்டர் அடித்து, அதை ஆங்காங்கே சுவறில் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில், கடவுளின் அவதாரம்... அவதார் ஆன் த வே ... காந்தாரா ஓரம்போ என்ற தலைப்புடன் .... அழிவில்லா அவதாரின் ஆத்மார்த்தமான அன்பு ரசிகர்கள் என போஸ்டர் ஒட்டி உள்ளனர். ரஜினி, கமல், அஜித், விஜய்க்கு போஸ்டர் ஒட்டும் ரசிகர்கள் முதல் முறையாக ஹாலிவுட் படத்திற்கு போஸ்டர் ஒட்டி உள்ளனர்.