»   »  சினிமாக்காரன் சாலை- 8: தொடர்ந்து குளித்துக்கொண்டே இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி!

சினிமாக்காரன் சாலை- 8: தொடர்ந்து குளித்துக்கொண்டே இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

‘நம்ம ஹன்சிகா மாதிரி இருக்கு?'

‘டேய் ‘ராஜபார்வை' நல்லாப்பாருடா. அது ஹன்சிகா மோத்வானியே தாண்டா"

‘டேய் குளிக்குதுடா'

‘ஆமாடா குளிக்குது... அதுக்கென்ன?'

‘நல்லா செக் பண்ணிட்டியா. எல்லாம் மேட்ச் ஆவுதா?'

‘ஐ..தோடா இவரு நேர்ல கொண்டு வந்து நிறுத்துனாதான் நம்புவார் போல?'

‘அப்ப ஹன்சிகாவேதான்ற?'

‘அடி செருப்பால...ஓடிப்போ அப்பால. இனிமே ஒனக்கு எந்த லிங்க்கும் அனுப்பல'.

-மேற்படி உரையாடல் குறித்து ஒன்றுமே சொல்ல வேண்டியதில்லை. வாட்ஸ் அப்பில் இருக்கும் எல்லோரும் ‘அதை' அறிவார்கள்.

Muthuramalingan's Cinemakkaran Saalai -8

'அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் 'WHATSAAP' ல் போட்டுடைக்கும்...

எம்ஜியாரின் ‘அடிமைப்பெண்' படத்துக்காக 1969-ல் கவிஞர் அமரர் வாலி எழுதிய பாடல். அதில் அடியேனின் இணைப்பு ஒரே ஒரு வெளங்காத வார்த்தைதான்.

46 வருடங்களுக்கு முன் இப்படி எழுதிய வாலி எப்படிப்பட்ட தீர்க்கதரிசியாக இருக்கவேண்டும். வயசான காலத்திலும் கூட வாலி கொஞ்சம் கிளுகிளுப்பான ஆளுதான் என்றாலும், த்ரிஷாக்களும் ஹன்சிகா மோத்வானிகளும் பாத்ரூமில் குளிப்பதை சில கயவர்கள் படம் பிடித்து இணையங்களில் பரப்புவார்கள் என்று அன்றே அவருக்கு எப்படித் தெரிந்தது?'

trisha

சரி காலம் எப்போதும் குழப்பத்தின் கோலம் என்று முடிவெடுத்து விட்டு வந்த காரியத்தில் இறங்கி விடலாம்.

செய்திப் பரிமாற்றத்தின் இன்னொரு புதிய வடிவமான வாட்ஆப்பில் இப்படி நடிகைகளின் அந்தரங்க படங்கள் தொடர்ந்து பரப்பப்படும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் அந்த நிறுவனத்தினர் இதற்கு 'ஹாட்ஸ் அப்' என்றே பெயர் வைத்திருப்பார்கள்.

'தொட்டு விடாதே ஷாக் அடிக்கும்' என்று சொல்லுகிற அளவுக்கு, சமீப தினங்களில் அவ்வளவு சூடாக இருக்கிறது இந்த வாட்ஸ் அப். ஒரு குழு அமைத்துக்கொண்டு எங்கிருந்தாவது நடிகைகளின் அந்தரங்க வீடியோக்களைப் பிடித்து 'செத்துச் செத்து விளையாடுவமா சேகரு' மாதிரி ஷேர் பண்ணி ஷேர் பண்ணி விளையாடுகிறார்கள். நவீன சரோஜாதேவி புத்தகங்கள் இந்த வாட்ஸ் ஆப் குரூப்கள்!

Muthuramalingan's Cinemakkaran Saalai -8

சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த த்ரிஷாவின் நிர்வாண குளியல் காட்சிகளுக்கு அப்புறம், சமீபமாக மிக அதிக அளவில் நடிகைகளின் அந்தரங்கப் படங்கள் வெளியாகின்றன. ‘தென்மேற்குப் பருவக்காற்று' நாயகி வசுந்தரா தாஸின் செல்ஃபிகள் சில தினங்களுக்கு வடகிழக்கு, தென்கிழக்கு என்று எல்லா திசைகளிலும் நடமாடின. அடுத்து திவ்யஸ்ரீ, லட்சுமி மேனன்களின் படங்கள், வீடியோக்கள் என்று சொல்லப்பட்ட சில படங்கள் வந்தன. லட்சுமி மேனன் வீடியோவுக்கு பின்னணியில் ஒரு கதை கூட பரவியது!

லேட்டஸ்டாக இரு தினங்களுக்கு முன்பு ஒரு ஹோட்டல் பாத்ரூமில் குளிக்க ஆரம்பித்த ஹன்சிகா மோத்வானி, இன்னும் குளியலை முடிக்காமல் தொடர்ந்து வாட்ஸ் ஆப்களில் லட்சக்கணக்கான முறை குளித்துக் கொண்டே இருக்கிறார்.

இந்த வகையான படங்கள் வெளியானதும், அது அந்த நடிகையேதானா என்பது மாதிரி ஒரு விவாதம் நடக்கும். 'செல்ஃப் பப்ளிசிடி பண்ணிக்கிறாங்க. அப்பத்தானே அவங்க மார்க்கட் சூடிபிடிக்கும்?' என்ற கமெண்ட்கள் பறக்கும். குறிப்பிட்ட நடிகை சில தினங்களுக்கு தலைமறைவாகிவிட்டு ‘அவள் நானில்லை' என்பது போல் வீக்காக ஒரு விளக்கம் கொடுப்பார். யாரும் ஏனோ சைபர் கிரைம்களில் புகார் கொடுப்பதில்லை.

அப்புறம் அடுத்த நடிகை, படுத்த காட்சி, அடுத்த குளியல், எடுத்த செல்ஃபி, அடுத்த வாட்ஸ் ஆப். மறுப்பு விளக்கம்.

Muthuramalingan's Cinemakkaran Saalai -8

சில தினங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் குறிப்பிட்ட நடிகையின் செல்ஃபி ஆபாசப் படங்களை வெளியிட்டு பரபரப்பான விற்பனையைப் பார்த்தார்கள். மறுநாள் இணையங்களில் அந்தப் பத்திரிகை முதலாளிக்கு கடுமையான கண்டனங்கள். தன் சொந்த மகளின் செல்ஃபி படங்கள் கிடைத்தால் இப்படி அட்டையில் வெளியிடுவாரா? என்ற தலைப்பில் சில கட்டுரைகள் வேறு.

நடிகைளுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்க வேண்டியதில்லை என்பது என் அபிப்ராயம். நடிகைகள் குறித்து ஒரு சின்ன கிசுகிசு கிடைத்தாலே ஈரைப் பேணாக்கி பேனைப் பெருமாளாக்கி பழகிக் கொண்டவை மீடியாக்கள். அப்படிப்பட்டவர்களிடம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

நடிகைகளாகிய நீங்களும் மனிதர்கள்தான். யாரை வேண்டுமானாலும் காதலியுங்கள். கலவி கொள்ளுங்கள். ஆனால் அதை என்ன '......த்துக்கு' செல்போனில் படம் பிடிக்கிறீர்கள்?

வசுந்தரா தாஸ் சங்கதிக்கு வருவோம். அவருடன் அந்தரங்கமாக செல்ஃபியில் இருந்தவர் அவருடனேயே சுற்றிக் கொண்டிருந்த ஒரு திரைத்துறை நபர்தான். வசுந்தரா அவரைக் கழட்டி விட்டவுடன்தான் அவர் இவரைப் பழிவாங்கும் நோக்கில் அந்த அந்தரங்களை வெளியிட்டார் என்கிறார்கள். சினிமாவில் உறவுகளின் சக்தி எவ்வளவு வீக்கானது என்பதை அறியாத மக்கா வசுந்தரா? அப்படியெனில் அந்த தண்டனைக்கு தகுதியானவர்தானே அவர்?

இந்த ஹன்சிகாவையே எடுத்துக்கொள்ளுங்கள். ‘ஏம்மா குளிக்கிறதை கொஞ்சம் நிறுத்துறயா?' இவருக்கு, தான் எந்த ஹோட்டலில் குளித்தோம் என்பது தெரியாதா? பாத்ரூம் கதவு துவாரத்தில் ஒளிப்பதிவு செய்த நபரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமா என்ன? சைபர் கிரைமுக்கு கிளம்பிப்போய் புகார் கொடுத்து, அட்லீஸ்ட் அடுத்து வேறு எவருக்கும் இது நிகழாத வண்ணம் காக்க முடியுமே? இதை எந்த நடிகையுமே செய்வதில்லியே ஏன்? ஏன்?? ஏன்???

ஏனோ இந்தப் பெரும் கேள்வி பதிலளிக்கப்படாமல் நீண்டகாலமாய் நிர்வாணமாய் நின்றுகொண்டே இருக்கிறது.

பின் குறிப்பு: கட்டுரையாளரிடம் ரூ 500 மதிப்புள்ள சோப்பு டப்பா சைஸிலுள்ள அரதப் பழசான செல்போன்தான் இருக்கிறது. அதில் வாட்ஸ் ஆப் வசதிகள் இல்லை. எனவே த்ரிஷா, ஹன்சிகா குளிக்கும் லிங்க் அனுப்பக் கோரி மெயில்கள் அனுப்ப வேண்டாம்.

THINK twice before asking LINK!

(தொடர்வேன்....)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The 8th chapter of Muthuramalingan's Cinemakkaran salai discusses about the recent trend of spreading personal adolescent images or videos of celebrities.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more