»   »  லட்சுமி ராயும், ஸ்ரீசாந்த்தும்?

லட்சுமி ராயும், ஸ்ரீசாந்த்தும்?

Subscribe to Oneindia Tamil
Lakshmi Roy
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முன்பு பெங்களூர் ஹோட்டலில், பெல்காம் அழகி லட்சுமி ராயை சந்தித்துவிட்டுப் போனதாக கன்னட திரையுலகில் ஒரு வதந்தி படு வேகமாக பரவியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சந்தித்தன. ஆனால் மழை காரணமாக ஆட்டம் அம்போவாகி விட்டது.

இருப்பினும் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சூப்பர்ப் ஆக பந்து வீசி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். படு தெம்புடன் இந்தத் தொடரை ஆரம்பித்த திருப்தியில் உள்ளார் ஸ்ரீசாந்த்.

இந்த நிலையில் ஸ்ரீசாந்த் குறித்த ஒரு வம்புச் செய்தி பெங்களூரில் உலா வர ஆரம்பித்திருக்கிறது.

ஆஸ்திரேலிய தொடருக்கு கிளம்பிச் செல்வதற்கு முன்பு பெங்களூர் வந்தாராம் ஸ்ரீசாந்த். அவரை மின்சின ஊட்டா என்ற படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிலர் பார்த்துள்ளனர்.

அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த படத்தின் நாயகி லட்சுமி ராயுடன் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாராம் ஸ்ரீசாந்த். அப்போது நள்ளிரவைத் தாண்டிய நேரம்.

படு நெருக்கமாக உட்கார்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனராம். லட்சுமி ராயைப் பார்ப்பதற்காகவே ஸ்ரீசாந்த் பெங்களூருக்கு வந்திருந்தாராம். இந்த சந்திப்பை முடித்து விட்டுத்தான் அவர் ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றதாக கூறுகிறார்கள்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷிடம் கேட்டபோது இதையெல்லாம் எப்படி சொல்வது என்று நழுவ விட்டார். இவர் வேறு யாருமல்ல, சயனைட் (தமிழில் குப்பி) படத்தை இயக்கியவர்தான்.

லட்சுமி ராய் வதந்தியில் சிக்கியது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தப் படம் லட்சுமி ராய்க்கு பெத்த பெயரை வாங்கிக் கொடுக்கப் போவதாக கன்னடத் திரையுலகில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், லட்சுமி ராய் பூண்டுள்ள வேடம்தான்.

தமிழத்தில் உள்ள தெருக்கூத்தைப் போல கர்நாடக் கிராமங்களில் மிகவும் பாப்புலர் ஆனது யட்சகானம். நம்ம ஊர் தெருக்கூத்தையும், கேரளத்து கதகளியையும் இணைத்தால் எப்படி இருக்கும். அப்படி இருக்கும் யட்சகானம்.

மின்சின ஓட்டா படத்தில் யட்சகான கலைஞரைப் போல வேடம் போட்டு நடித்துள்ளாராம் லட்சுமி ராய்.

இந்தப் பாடல் காட்சியில் லட்சுமி ராய், நடிகர்கள் முரளி, விஜய் ராகவேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் லட்சுமி ராய் யட்ச கான கலைஞரைப் போல வருகிறார்.

வழக்கமாக யட்சகான கலைஞராக பெண்கள் நடிக்க மாட்டார்கள். ஆனால் முதல் முறை, லட்சுமி ராய் இந்த கேரக்டரில் நடித்துள்ளார். இதற்காக கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் லட்சுமி ராய்க்கு மேக்கப் போட்டனராம். கேரக்டரை உள் வாங்கி அசத்தலாக நடித்துள்ளாராம் லட்சுமி ராய்.

கிளாமர் அழகி, கவர்ச்சி காட்டத்தான் லாயக்கு என்று தன் மீது படிந்து விட்ட போர்வையை இந்தப் படம் விலக்கி, தன்னால் நடிக்கவும் முடியும் என்பதை இப்படம் நிரூபிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் லட்சுமி ராய்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil