For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'திம்சு' சோனாவும் 'திகுதிகு' கிசுகிசுவும்!

  By Staff
  |

  Sona
  கோலிவுட்டின் ஹாட் கேர்ள் (ஆண்ட்டி?!) இப்போதைக்கு நமீதாவோ, நயன்தாராவோ அல்ல... இன்றைய தேதியில் அந்தப் பட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர் கவர்ச்சியை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் சோனா!.

  பத்துப் பத்து படத்தில் கள்ளக் காதலுக்கு புது 'இலக்கணமே' படைக்கும் இளம் மனைவியாகவும், குசேலனில் பார்வையாளர்களை கதிகலங்க வைக்கும் செக்ஸ் குண்டாகவும் வந்த சோனாவைப் பற்றி தினம் ஒரு பரபரப்பு.

  அவர் ஒரு மங்கோலியப் பெண் என்றும், வாய்ப்புக்காக எந்த அளவுக்கும் இறங்கி வரத் தயாராக இருப்பதாகவும், ஒரு தொழிலதிபரை வளைத்துப்போட முயற்சிக்கிறார் என்றும் நாளொரு தகவல்கள்.

  இப்போது புதிதாக ஒரு அதிர்ச்சிக் குண்டு வீசியிருக்கிறார்கள் கோடம்பாக்கப் புள்ளிகள் சிலர். சோனாவுக்கு ஏறெகனவே 6 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும், சென்னையில் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருப்பதாகவும் பேசப்படுகிறது.

  என்ன சொல்கிறார் சோனா?:

  எதையும் உரிய முறையில் பெற வேண்டும். அதற்கு பொறுமை அவசியம். மாடலிங் செய்துகொண்டிருந்த நான், சிவப்பதிகாரம் மூலம் சினிமாவுக்கு வந்தேன். எனக்கு ஏற்ற பாத்திரம் கிடைக்கும் வரை, பொறுமை காத்தேன். என்னை யார் என அடையாளம் காட்டியது இயக்குநர் சாமிதான்.

  மிருகம் படத்தில் என்னுடைய வேடம் பெரிதும் பேசப்பட்டது. அடுத்து பத்துப்பத்து படம்.

  அந்தக் கதையைக் கேட்டதும் மனதில் ஒரு நம்பிக்கை வந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால், கிட்டத்தட்ட வில்லியாக உருமாற்றப்பட்ட பாத்திரம். வயதான கணவருக்கு வாழ்க்கைப்படும், இளம் மனைவியைப் பற்றிய கதை.

  இந்தப் படத்துக்கு கிளாமர் அவசியம் என்பதால், நானும் ரொம்பவே தாராளம் காட்டினேன். கேமரா கோணம், தொழில் நுட்பம் தெரியாததால், சில காட்சிகளில் எனது கவர்ச்சி கூடுதலாக வெளிப்பட்டுவிட்டது(!!).

  பத்து பத்துவைத் தொடர்ந்து, அதே சாயலில் உள்ள கதைகள் என்னை நோக்கி படையெடுத்தன. எனக்கு அதில் ஆர்வம் இல்லை. தற்போது வெளியான குசேலனில் வடிவேலுவுக்கு ஜோடியாக காமெடியிலும் கலக்கி உள்ளேன். தேர்ந்தெடுத்து படங்களைச் செய்யவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன்.

  மேக்கப் ஏதுமில்லாமல் பாட்டியாக நடிக்கும் வரை இந்தத் துறையில் நீடிக்க வேண்டும் என்பதே என் ஆசை.

  ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அடையாளம் இருக்கிறது. அதனால், நான் யாருக்கும் போட்டி கிடையாது. சிங்களத் தாய்க்கும், போர்ச்சுகல் அப்பாவுக்கும் நாகர்கோவிலில் பிறந்த நான், சுத்தமான தமிழச்சி. காதல் என்பது எனக்கு நானே போட்டுக் கொள்ளும் தடையாக உணர்கிறேன். இதை உணர்ந்தவள் நான்.

  ஆறு ஆண்டுகளாக என்னைக் காதலித்த ஒருவர், காரணமேயில்லாமல் என்னை கழட்டிவிட்டார். அதில் எனக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்...

  எனக்கு குழந்தை இருக்கிறதா என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னிடம் இருக்கும் இளமையையும் அழகையும் மட்டும் பாருங்கள். இல்லாததை ஏன் கேட்கிறீர்கள் என்கிறார் சாமர்த்தியமாக!

  அடேங்கப்பா...

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X