»   »  பெருகி வரும் வதந்திகள்-கார்த்திக்குப் பெண் தேடும் தாயார்

பெருகி வரும் வதந்திகள்-கார்த்திக்குப் பெண் தேடும் தாயார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் கார்த்தி குறித்து அதிக அளவில் வதந்திகள் வர ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து அவரது வீட்டில் பெண் பார்க்கும் படலத்தை முடுக்கி விட்டுள்ளனராம். அவரது தாயார்தான் இதில் படு மும்முரமாக இருக்கிறாராம். இதை கார்த்தியே கூறியுள்ளார்.

நடிகர்கள், நடிகைகள் என்றால் வதந்திகளும் கூடவே பின் தொடர்ந்து வந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது நடிகர் கார்த்தி குறித்துதான் நிறைய வதந்திகள். தமன்னாவுடன் இணைத்துப் பேசுகிறார்கள். மறுபக்கம் காஜல் அகர்வாலும், கார்த்தியை விழுந்து விழுந்து புகழ்ந்து பேசுகிறார்.

இப்படி பல முனைகளிலிருந்தும் சரமாரியாக கார்த்தியை மையம் வைத்து பெண்களும், வதந்திகளும் பெருக ஆரம்பித்திருப்பதால் அவரது வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.

இதுகுறித்து கார்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

என்னையும், தமன்னாவையும் இணைத்து வரும் செய்திகளில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தியே. பிரபலமாகி வருபவர்களை பற்றி வழக்கமாக வரும் விஷயம்தான் இது என்று சுலபமாக எடுத்துக்கொள்கிறேன்

எந்தவிதத்திலும் நான் வருத்தப்படவில்லை. கவலைப்படவும் இல்லை. இந்த வதந்தி ஒரு பெண்ணை பாதிப்பதால், மறுப்பு தெரிவித்து வருகிறேன்.

எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். எங்க அம்மா மிக தீவிரமாக எனக்கு பெண் தேடி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் மணப்பெண் வேட்டை நடக்கிறது. வேலைக்கு போகும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதில், எனக்கு உடன்பாடு இல்லை. வீட்டுக்கு அடங்கிய பெண்ணாக இருக்க வேண்டும். குடும்பத்தை கவனித்துக் கொள்கிற பெண்ணுக்காக, நான் காத்திருக்கிறேன்.

சினிமா நடிகருக்கு பெண் கொடுப்பது என்றால், பெற்றோர்கள் கொஞ்சம் தயங்கத்தான் செய்கிறார்கள். எங்க குடும்பத்தை பற்றி முழுமையாக தெரிந்து இருந்தால், தயங்க மாட்டார்கள்.

பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது டாக்டர், என்ஜினீயர், நடிகர் என்று மூன்று மாப்பிள்ளைகளின் ஜாதகம் வந்தால், டாக்டரையும், என்ஜினீயரையும்தான் முதலில் தேர்வு செய்வார்கள். அதை தப்பு என்று சொல்ல முடியாது என்றார்.

நடிகர்கள் என்றால் தவறானவர்கள் என்று அர்தத்ம் கிடையாது. அதேபோல வேலைக்குப் போகிற பெண்களும், வீட்டுக்கு அடங்காத பெண்கள் என்று சொல்லவும் முடியாது, இல்லையா கார்த்தி...

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil