விரக்தியில் நம்பர் நடிகை... வேற வழியே இல்லை... டான்ஸ் மாஸ்டருடன் ஜோடி சேர முடிவு?

By Staff

சென்னை: தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் நம்பர் நடிகை ஒரே வருடத்தில் திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார்.

இப்போதும் கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயர் இருந்தாலும், தோல்விக்கும் மேல் தோல்வி என தடுமாறி வருகிறார்.

சமீபத்தில் ரிலீஸான திகில் திரைப்படமும் மோசமான விமர்சனங்களைப் பெற்றதால் ரொம்பவே நொந்துவிட்டாராம்.

இதனால், மார்க்கெட்டை எந்தக் காரணம் கொண்டும் விட்டுவிடக் கூடாது என இப்போது புதிய ரூட்டை பிடித்துள்ளாராம் அந்த நம்பர் நடிகை.

செட்டில் ஆன நம்பர் 1 நடிகை

செட்டில் ஆன நம்பர் 1 நடிகை

சினிமாவில் அறிமுகமான புதிதில் அதிகம் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்த நம்பர் நடிகை, திடீரென உச்சம் தொட்டார். உச்ச நட்சத்திரத்துடன் ஜோடியாக நடித்ததை விடவும், விரல் நடிகரின் வலையில் விழுந்ததும் தான் அவர் டாப் கியரில் மார்க்கெட்டை பிடித்தார். அதேநேரம் விரல் நடிகருடன் காதல் என செய்திகள் வைரலாக, அதேவேகத்தில் நடனத்தில் தூள் பறத்தும் டான்ஸ் மாஸ்டருடன் ஐக்கியமானார். ஆனால், கடைசியில் அதுவும் இல்லாமல் இயக்குநரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். அதுமட்டுமா ஒரே ஆண்டில் திருமணம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.

தோல்வி மேல் தோல்வி

தோல்வி மேல் தோல்வி

சொந்த வாழ்க்கையில் எல்லாம் நினைத்தது மாதிரி நடந்தாலும், சினிமா கேரியரில் அடி மேல் அடி விழுகிறதாம். நம்பர் நடிகை நடித்து 2021ம் ஆண்டில் 4 திரைப்படங்கள் வெளியாகின. அதில் மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படங்களும், தமிழில் இரண்டு திரைப்படங்களும் அடங்கும். இந்த 4 படங்களுமே மிகப் பெரிய தோல்வியை தழுவின. முக்கியமாக தமிழில் ஒன்று அவரது சொந்த தயாரிப்பிலும், இன்னொன்று உச்ச நட்சத்திரத்துக்கு ஜோடியாக நடித்தும் வெளியானது. ஆனாலும், இந்தப் படங்கள் ரசிகர்களிடம் கொஞ்சம் கூட வரவேற்பைப் பெறவில்லை.

விரக்தியின் உச்சத்தில் நடிகை

விரக்தியின் உச்சத்தில் நடிகை

சரி, இந்தாண்டு நன்றாக இருக்கும் என எதிர்பார்த்த அவருக்கு நிலைமை இன்னும் மோசமாகியுள்ளதாம். தெலுங்கில் டாப் ஸ்டாருடன் நடித்த ஒரு படம் மட்டுமே கொஞ்சம் ஆறுதல் கொடுத்துள்ளது. மற்றபடி மலையாளத்தில் சமீபத்தில் வெளியான தங்கமான திரைப்படமும், தமிழில் 3 திரைப்படங்களும் சொல்லும்படி அமையாமல் போய்விட்டதாம். தனது காதலரே இயக்கிய இரண்டு நாயகி படத்தில் கூட, சமத்தான நடிகை தான் சூப்பராக ஸ்கோர் செய்திருந்தார். கடைசி நம்பிக்கையாக இருந்த சொந்த தயாரிப்பில் வெளியான திகில் திரைப்படமும் காலை வாரிவிட்டதாம். இதனால் நம்பர் நடிகை ரொம்பவே விரக்தியின் உச்சியில் இருப்பதாக தெரிகிறது.

அதிரடி முடிவுக்கு ரெடி

அதிரடி முடிவுக்கு ரெடி

அதேநேரம் இன்னொரு சின்ன நம்பர் நடிகை, மணியான இயக்குநரின் அந்த வரலாற்று திரைப்படத்தில் நடித்து கம்பேக் கொடுத்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல் கோலிவுட்டின் தற்போதைய டாப் நடிகர்கள் இருவரின் படங்களிலும் அந்த சின்ன நம்பர் நடிகை நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால், கலக்கத்தில் உள்ள டாப் நடிகை அதிரடியாக ஒரு முடிவு எடுத்துள்ளாராம். சீக்வெல் படங்களை இயக்குவதில் கில்லாடியான இளம் இயக்குநர், தனது நெருங்கிய நண்பன் இயக்கும் ஒரு படத்தை சொந்தமாக தயாரிக்கவுள்ளாராம். அதில், திகில் படங்களின் ஹோல்சேல் டீலர் என பெயரெடுத்த டான்ஸ் மாஸ்டர் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறாராம். அந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ரெடியா என அந்த சீக்வெல் இயக்குநர் கேட்க, நம்பர் நடிகையும் உடனே ஓக்கே சொல்லிவிட்டதாக தெரிகிறது உச்ச நட்சத்திரங்கள் அல்லது நாயகிக்கு முக்கியத்துவமான படங்களில் மட்டுமே கமிட்டாகும் நம்பர் நடிகை,. டான்ஸ் மாஸ்டருடன் ஜோடியாக நடிக்க ரெடியாகியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X