மனைவிக்கு தெரியாமல் சீரியல் நடிகையின் வீட்டில் கசமுசா.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி!
சென்னை: அங்கட தேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து இறங்கியவர் தான் அந்த வனப்பான நடிகை. பார்ப்பதற்கு அம்சமாக இருந்ததால், பிரபலமான சீரியலில் லீட்ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து நடித்த சீரியல் முடிவுக்கு வர, இருவருக்கும் தனித்தனியாக வெவ்வேறு பிரபலமான தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார்கள். அப்போது தான் இவர்களுக்கு இடையே பிரச்சனை ஆரம்பித்தது. இத்தனை ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததை மறைத்துவிட்டு, புதிதாக சீரியலில் நடித்த நடிகையுடன் ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட அந்த வனப்பு நடிகை, இவரை இப்படியே விட்டால் சரிபட்டு வராது என, பல முறை கண்டித்துள்ளார். ஆனால், அந்த சீரியல் நடிகரோ கொஞ்சம் கூட திருந்தாமல் தொடர்ந்து அந்த நடிகையுடன் கனெக்ஷனில் இருந்துள்ளார்.

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி: இதற்கு ஒரு முடிவு எட்டியே ஆகவேண்டும் என முடிவு செய்த வனப்பு நடிகை, இத்தனை நாட்களாக மறைத்துவைத்து இருந்த திருமண போட்டோவை இணையத்தில் வெளியிட்டார். அதுமட்டுமில்லாமல் தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார். திருமண விஷயத்தை ரகசியமாக வைத்து இருக்க நினைத்த நடிகர் இதனால், அதிர்ச்சி அடைய, இருவருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் சண்டை எல்லை மீறி போக, நடிகர் வீட்டுக்கு வருவதையே நிறுத்திவிட்டு புது காதலியின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வனப்பு நடிகை, திருமணமான ஆதாரத்தை காவல்நிலையத்தில் காட்டி, என்னை திருமணம் செய்து கொண்டு புது காதலியுடன் குத்து அடிக்கிறார் என புகார் கொடுத்து, புது காதலியின் வீட்டுக்கு போலீசை அழைத்து சென்று இருவரையும் கையும் களவுமாக ஸ்கெட் போட்டு தூக்கி உள்ளார். வசமாக சிக்கிக்கொண்ட நடிகரின் மொத்தமானமும் போக வனப்பு நடிகைக்கும், நடிகருக்கும் சட்டை முடிந்திப்போய் கடைசியில் இருவரும், ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை சுமத்தி கொண்டு விவாகரத்து கேட்டு தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











