வாய் மட்டும் தான் வேலை செய்யுது.. ஒண்ணும் கொடுக்க காணோமே.. காமெடி நடிகரை சீண்டிய பிரபலம்!

சென்னை: காமெடி நடிகர் ஒருவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், அவருக்கு உதவி செய்வதாக அறிவித்த காமெடி நடிகர் இதுவரை நேரில் சென்று சந்திக்கவோ, எந்தவொரு உதவியோ செய்யவில்லை என கிண்டல் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

கைவசம் பல படங்களை வைத்துக் கொண்டு நடித்து வரும் அந்த நடிகர் ஏன் கஷ்டப்படும் நடிகருக்கு உதவவில்லை என திரைத் துறையில் இருக்கும் பிரபலம் ஒருவரே கேள்வி எழுப்பி இருப்பது கோடம்பாக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெறும் வாய் மட்டும் தான் வேலை செய்கிறது. கொடுக்க மனம் வரவில்லை போல என காமெடி நடிகரை அந்த பிரபலம் சீண்டி இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கஷ்டத்தில் காமெடி நடிகர்

கஷ்டத்தில் காமெடி நடிகர்

சினிமாவில் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வந்த காமெடி நடிகருக்கு தற்போது போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். ரொம்பவே கஷ்டப்பட்டு வரும் அவருக்கு உதவி செய்ய ஆளே இல்லை என சினிமா பிரபலங்களை பார்த்து சாடி இருந்தார்.

சில நல்ல உள்ளங்கள் உதவி

சில நல்ல உள்ளங்கள் உதவி

காமெடி நடிகரின் நிலையை அறிந்த உடனே அந்த நடிகருக்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என நினைத்து சினிமாவில் உள்ள சில முன்னணி நடிகர்கள் உடனடியாக செய்த உதவி ரசிகர்களாலும் சக கலைஞர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

வாய் வார்த்தை

வாய் வார்த்தை

பிரபல காமெடி நடிகருடன் சிறு சிறு வேடத்தில் நடித்த வந்த காமெடி நடிகர் இப்படி கஷ்டப்படுகிறாரே, அவருக்கு நீங்கள் ஏதாவது உதவி செய்வீங்களான்னு பலரும் நேரடியாகவே கேட்கத் தொடங்கியதும், வேறு வழியில்லாமல் வெறும் வாய் வார்த்தைக்காக கண்டிப்பாக முடிந்ததை செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.

ஒண்ணுமே செய்யல

ஒண்ணுமே செய்யல

ஆனால், இதுவரை அந்த நடிகரை சென்று சந்திக்கவோ அவருக்கு தேவையான உதவிகளை செய்யவோ அந்த காமெடி நடிகர் முன் வரவில்லை என்பதை அறிந்த அந்த கஷ்டப்படும் நடிகரின் நண்பர்களில் ஒருவர் வெறும் வாய் மட்டும் தான் வேலை செஞ்சது, ஆனால், கொடுக்க மனசு வரலையேப்பா என பேசியது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

நடிகர் நம்பிக்கை

நடிகர் நம்பிக்கை

ஆனால், கண்டிப்பாக அந்த காமெடி நடிகர் தனக்கு உதவி செய்வார் என்கிற நம்பிக்கையுடன் அந்த நடிகர் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் உதவுவேன் என சொன்னதே அவருக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது எனக் கூறியிருந்தார். அந்த காமெடி நடிகர் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் விரைவில் உதவுவார் என்றே பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X