அப்பா கொஞ்சம் நிம்மதியா விடுப்பா.. எதுக்கும் வராத.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட வாரிசு நடிகர்.. ஏன்?
சென்னை: அப்பாவை போலவே தானும் ஃப்ளாப் ஹீரோவாக மாறிவிடுவேனோ என்கிற பயம் அந்த வாரிசு நடிகருக்கு அதிகமாகவே வந்துவிட்டதாக கூறுகின்றனர். அதன் காரணமாகவே இந்த முறை அப்பாவை எந்த இடத்திலும் மூக்கை நுழைக்க விடாமல் பார்த்துக் கொள்வதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
எல்லாமே தனக்கு தெரிந்தது போல நடந்துக் கொள்ளும் வாரிசு நடிகர் அறிமுகம் ஆனதில் இருந்தே எந்தவொரு வெற்றியும் கொடுக்காமல் தொடர்ந்து ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், இந்த முறையும் அவரது படம் வெளியானால் பல சிக்கல்களும் சர்ச்சைகளும் கிளம்பும் என்கின்றனர்.

அந்த இயக்குநரை நம்பிய நடிகர் அப்பாவின் அடையாளம் தான் தனக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து தொடர்ந்து அவரை ஒதுக்கி வைக்கத் தொடங்கி விட்டார்.
மகனுக்காக வழிவிட்ட அப்பா: திறமையான அப்பா நடிகரும் தனது மகனின் வளர்ச்சி மட்டுமே தனக்கு முக்கியம் என்றும் இதற்கு மேல் தனக்கு திரையுலகில் பெரிதாக எந்த இடமும் வேண்டாம் என்றும் அனைத்தையும் பார்த்து விட்டாகி விட்டது என்றும் வாரிசு இனிமேல் வாழட்டும் என மகனுக்காக வழிவிட்டு அமைதியாக வீட்டிலேயே முடங்கி விட்டார் அப்பா என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
ஆரம்பத்தில் ஆரத்தி எடுத்து: மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற ஆசையுடன் ஆரம்பத்தில் ஆரத்தி எடுத்து ஏகப்பட்ட வேலைகளை பார்த்து வந்த நடிகரின் மனம் தற்போது வேதனையில் உள்ளது என்றும் எந்தவொரு விழாவுக்கும் கூட அப்பாவை அழைக்காமல் தான் மட்டுமே பிரதானமாக திகழ வேண்டும் என்றும் அப்பா வந்தால் அது அவருடைய விழாவாக மாறிவிடும் என நினைத்து மொத்தமாக ஒதுக்கி விட்டார் வாரிசு எனக் கூறுகின்றனர்.
பல மாற்றங்கள்: இயக்குநர் ஆரம்பத்தில் சொன்ன கதையை பல முறை மாற்றி டைரக்டரின் ஹிட் படக் காட்சிகளை எல்லாம் ஒன்றாக ரீமிக்ஸ் செய்து வைத்தது போல ஒரு படத்தை தனக்காக உருவாக்கி உள்ளாராம் வாரிசு. கண்டிப்பாக இந்த முறை மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்து பெரிய நடிகராக மாறிவிடுவோம் என்கிற முழு நம்பிக்கையுடன் உள்ள வாரிசுக்கு படம் வெளியானால் தான் மக்கள் கொடுக்கும் ரிசல்ட் என்ன என்பது புரியும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











