»   »  ஏய் படத்தில் பிரச்சினை

ஏய் படத்தில் பிரச்சினை

Subscribe to Oneindia Tamil

சரத்குமார்- நமிதா போட்டி போட்டு கவர்ச்சி காட்டியிருக்கும் (!!) ஏய் படம் தயாரிப்பாளர்களுக்குஇடையே ஏற்பட்ட மோதலால் சிக்கலில் மாட்டியிருக்கிறது.

விஜயகாந்துக்கு அடுத்து கோலிவுட்டில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பவர்நடிகர்-கம்-அரசியல்வாதி சரத்குமார். ஆனால் இவரது படத்திற்கே இப்போது பிரச்சினை எழுந்துள்ளது.

ஒரு டெலிசீரீயலுக்கு உண்டான பட்ஜெட்டில் இயக்குனர் வி.சேகரை வைத்து பொறந்தா வீடா புகுந்த வீடா, வரவுஎட்டணா செலவு எட்டணா, காலம் மாறிப் போச்சு என படங்களை எடுத்துக் கொண்டிருந்த திருவள்ளுவர்கலைக்கூடம் (இதில் வி.சேகரும் ஒரு பார்ட்னர்) முதன் முறையாக மிகப் பெரிய பட்ஜெட்டில் நடிகர் சரத்குமார்,நமீதாவை வைத்து ஏய் படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தது.

பூஜை போட்ட நாளிலிருந்து படத்தைப் பற்றி பரபரப்பாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஒரு காட்சியில்சரத்குமார் நிர்வாணமாக நடிக்கிறார் என்று செய்தி வந்தது. சரத்குமாருடன் போட்டி போட்டு நமீதாவும்ஆடைக்குறைப்பு செய்திருக்கிறார் என்று வெளியிட்டார்கள். அதற்கு சாட்சியம் கூறும் வகையில் நமிதாவின்படங்களும் வெளியாயின.

பின்பு முதன்முறையாக சரத்குமார் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் என்று கூறி பயமுறுத்தினார்கள்.

இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக கிளம்பியிருந்தது. ஆனால் இப்போது வெளிவருமா இல்லையாஎன்று தெரியாத நிலையில் படம் இருக்கிறது. காரணம் பட்ஜெட் கணக்கைத் தாண்டி படத்தின் செலவுஎகிறியிருப்பதுதான்.

முரளி, பாண்டியராஜன், சங்கீதா, கனகா என மார்க்கெட் அவுட்டான நடிகர், நடிகைகளை வைத்து 1 கோடிக்கும்குறைவான பட்ஜெட்டில் படம் தயாரித்து வந்த தயாரிப்பாளர்கள், ஏய் படத்திற்கு ஆன செலவை ஜீரணிக்கமுடியவில்லை. இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அளவுக்கதிமாக செலவு இழுத்து வைத்துவிட்டார் என்ற பொருமல்வேறு.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு, படத்தின் இறுதிக்கட்ட செலவுகளுக்கு காசைவெளியில் விட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். பஞ்சாயத்து செய்து வைக்க வேண்டிய சரத்குமாரோ,சத்ரபதி, அய்யா என தனது அடுத்த பட வேலைகளில் மூழ்கிவிட, ஏ.வெங்கடேசுக்கு மண்டை காய்ந்து விட்டது.

கடைசியில் ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்தார். ஏய் படம் பட்ஜெட்டைத் தாண்டிவிட்டது. ஒத்துக் கொள்கிறேன். இதை ஈடுகட்ட அர்ஜூனை வைத்து குறைந்த செலவில் ஒரு படம் இயக்கித்தருகிறேன். முதலில் இதை ரிலீஸ் செய்ய முயற்சி செய்யுங்கள் என்றார்.

இதனையடுத்து சமதானமான தயாரிப்பாளர்கள், படத்தை ரிலீஸ் செய்ய தற்போது முயற்சி செய்து வருகிறார்கள்.

Read more about: actress, aei, cinema, namitha, ramya, sarath kumar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil