பைக் நடிகருடன் பல ஆண்டு பகை...வேறு வழியில்லாமல் இறங்கி வந்த ரீஎன்ட்ரி நடிகர்

சென்னை : பைக் நடிகருடன் இணைந்து இனி நடிக்கவே மாட்டேன் என பல ஆண்டுகளாக பகையை வளர்த்துக் கொண்டு, முறைப்புடன் இருந்த அந்த ரீஎன்ட்ரி நடிகர் வேறு வழியில்லாததால், தற்போது பகையை மறந்து இறங்கி வந்துள்ளாராம்.

எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்து படிப்படியாக உயர்ந்து உச்ச நடிகரானவர் பைக் நடிகர். மிகவும் அமைதியானவர், அன்பானவர், நல்ல மனிதர், அவரை போல் பெண்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது என அனைவராலும் பாராட்டப்படுபவர். அவருடன் பணியாற்றிய எவரும் அவரை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

இன்டஸ்ட்ரியில் தான் உண்டு, தன் வேலை உண்டு, குடும்பம் உண்டு என இருக்கும் பைக் நடிகரிடம் ஒருவர் பல வருட பகையால் முறைத்துக் கொண்டு, பேசாமல் இருந்து வருகிறார் என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பைக் நடிகரை போலவே அந்த பிரபல நடிகரும் சினிமா பின்புலம் இல்லாமல், தனது திறமையாலும், உழைப்பாலும் மேலே வந்தவர் தான்.

உச்சித்திற்கு போன நடிகர்

உச்சித்திற்கு போன நடிகர்

ஆரம்பத்தில் துணை நடிகராக சிறு சிறு ரோல்களில் நடித்து வந்தவர், ஒரு கட்டத்தில் புகழின் உச்சிக்கே போய் விட்டார். இவரது கால்ஷீட் கிடைக்காதா, இவரை எப்படியாவது தங்கள் படத்தில் புக் செய்து விட வேண்டும் என ஒவ்வொரு டைரக்டரும், தயாரிப்பாளரும் தவம் கிடந்தனர். இவர் நடித்தாலே போதும் போட்ட காசை எடுத்து விடலாம் என நிலை இருந்தது.

கன்டிஷன் போட்ட கொடுமை

கன்டிஷன் போட்ட கொடுமை

ஆனால் வழக்கம் போல் புகழின் மயக்கத்தால், தன்னை புக் செய்ய வரும் டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் ஏகப்பட்ட கன்டிஷன்கள் போட துவங்கினார் அந்த பிரபல நடிகர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி உச்ச நடிகர்களை போல் தனக்காக கதையை மாற்றி எழுதும் படி கூட கேட்க துவங்கி விட்டாராம். பலரும் இதை வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டார்கள்.

பல ஆண்டு பகை

பல ஆண்டு பகை

அப்படி புகழின் உச்சத்தில் இருந்த போது பைக் நடிகருடன் சேர்ந்து பல வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் நடித்தாராம். கதைப்படி பைக் நடிகரும், அந்த பிரபலமும் நண்பர்களாக வாடா போடா என பேசி நடிக்க வேண்டுமாம். ஷுட்டிங் முடிந்த பிறகும் கூட பழக்க தோஷத்தில் அப்படியே கூப்பிட்டுள்ளார் நம்ம பைக் நடிகர். ஆரம்பத்தில் விளையாட்டாக எடுத்துக் கொண்ட அந்த பிரபலம், பிறகு சீரியசாகி என்னை எப்படி நீ மரியாதை இல்லாமல் பேசலாம் என சண்டை போட்டுள்ளார். அதோடு இனி பைக் நடிகருடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் என பிடிவாதமாக அதற்கு பிறகு வந்த பல பைக் நடிகர் பட வாய்ப்புக்களை வேண்டாம் என மறுத்து விட்டாராம்.

வழிய சென்று மன்னிப்பு

வழிய சென்று மன்னிப்பு

இது முடியாது, அது முடியாது என வாய் சவடால் பேசி வந்த நடிகர், ஒரு விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்டார். இதனால் மொத்தமாக அவரை அனைவரும் ஓரங்கட்டி வைத்தனர். பல வருடங்களாக போராடி, ஒரு வழியாக மனம் வருந்தி, சினிமாவிற்கு ரீஎன்ட்ரி ஆகி உள்ளார். தான் புகழின் உச்சத்தில் இருந்த போது தூக்கி எறிந்து பேசியவர்களிடம் தானாக சென்று மன்னிப்பு கூட கேட்டு வருகிறாராம். இவரது மாற்றத்தை பார்த்து பலரும் மீண்டும் சான்ஸ் தர முன்வந்துள்ளனராம்.

பகையாவது, புகையாவது

பகையாவது, புகையாவது

விட்ட இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் இருக்கும் அந்த ரீஎன்ட்ரி பிரபலம், தற்போது பைக் நடிகர் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஓகே சொல்லி விட்டாராம். இனியும் பகை,புகை என பேசிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என புரிந்து கொண்டு, உச்ச நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு சினிமா வட்டாரங்களில் தகவலை பரவ விட்டுள்ளாராம். தான் முன்பு போல் கிடையாது என்பதையும் கிடைக்கும் சான்ஸில் எல்லாம் காட்ட முயற்சி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X