சம்பளத்தை உயர்த்தி ஆப்பு வைத்த நம்பர் நடிகை... பாவம் அந்த நடிகர் டைரக்டர்...நிலைமை இப்படியா ஆகணும்

சென்னை : நம்பர் நடிகையால் பண்ணும் காரியங்களால் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருகிறாராம் அந்த டைரக்டர். இப்பவே இப்படின்னா இன்னும் போகிற போக்கை பார்த்தால் முதலுக்கே மோசம் வந்து விடும் போல இருக்கே என தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம்.

பல ஆண்டுகள் போராடி ஒரு படத்தை எடுத்து இப்போது தான் கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்திருக்கிறார் அந்த டைரக்டர். இந்த படத்தின் ப்ரொமோஷனுக்கு கூப்பிட்டதுக்கே நம்பர் நடிகை வர மறுத்து விட்டார். ப்ரொமோஷன் போன்ற விழாக்களுக்கு போவதில்லை என்பதை பல வருட கொள்கையாக வைத்திருப்பது உனக்கு தெறியாதா என டைரக்டரிடம் ஸ்டிரிட்டாக கூறி விட்டாராம்.

 சமத்து நடிகையுடன் நெருக்கம்

சமத்து நடிகையுடன் நெருக்கம்

உண்மையில் விழாவிற்கு போகா விட்டாலும் மற்ற வழிகளில் படத்திற்கு ப்ரொமோஷன் செய்யும் முயற்சிகளில் தான் இருந்து வந்தாராம் நம்பர் நடிகை. ஆனால் பட ஷுட்டிங்கின் போது நடந்த பார்ட்டியில் சமத்து நடிகையுடன் டைரக்டர் காட்டிய ஓவர் நெருக்கத்தால் செம கடுப்பாகி தான் அத்தனையையும் நிறுத்தி விட்டாராம் நம்பர் நடிகை. இது பற்றி டைரக்டரிடமே சண்டை போட்டு, பிரேக் அப் வரை போன நம்பர் நடிகை, படத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் ஒதுங்கி விட்டாராம்.

புலம்பும் டைரக்டர்

புலம்பும் டைரக்டர்

ப்ரொமோஷனே இல்லாததால் தான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. போட்ட காசை எடுக்க முடியுமா என புலம்பி வருகிறாராம் அந்த டைரக்டர். இந்த படத்திற்கு தான் இப்படி என்றால், அடுத்த படத்திற்கும் பெரிய ஆப்பாக வைத்து விட்டாராம் நம்பர் நடிகை. இதனால் மொத்த வாழ்க்கையும் போய் விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறாராம் டைரக்டர்.

சம்பளத்தை உயர்த்திய நம்பர் நடிகை

சம்பளத்தை உயர்த்திய நம்பர் நடிகை

முதல் முறையாக பெரிய நடிகரை வைத்து படம் இயக்கும் சான்ஸ் கிடைத்ததால், நம்பர் நடிகையின் ராசி என கொண்டாடி பூரித்து போயிருந்தாராம் டைரக்டர். இதில் எப்படியாவது தனது முழு திறமையையும் காட்டி பெரிய அளவில் வளர்ந்து விட வேண்டும் என பிளான் போட்டு வைத்திருந்தாராம் டைரக்டர். ஆனால் டைரக்டர் இயக்க போகும் பெரிய நடிகரின் படத்திலும் நம்பர் நடிகையை நடிக்க வைக்க தயாரிப்பு தரப்பு நினைத்துள்ளது. இதற்காக நம்பர் நடிகையிடம் பேசிய போது, தனக்கு 10 கோடியும், டைரக்டருக்கு 10 கோடியும் சம்பளம் வேண்டும் என கறாராக கேட்டுள்ளாராம்.

நம்பர் நடிகையின் மாஸ்டர் பிளான்

நம்பர் நடிகையின் மாஸ்டர் பிளான்

நம்பர் நடிகை பாலிவுட்டிலும் படம் நடித்து வருவதால், தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். அதோடு, நம்பர் நடிகை சமீப நாட்களாக ஸ்லிம்மாகிறேன் என்ற பெயரில் டோக்கு விழுந்த கிழவி ரேஞ்சுக்கு போய் விட்டதால் மார்க்கெட்டில் தற்போது அவரை பெரிதாக யாரும் தேடுவதில்லையாம். அதனால் தான் தானே தயாரித்து சில படங்களில் நடித்து வந்தாராம். இதனால் கிடைக்கும் பெரிய படங்களை பயன்படுத்தி சான்ஸ் கிடைக்கும் போதே முடிந்த அளவிற்கு சம்பாதித்து விடலாம் என நினைத்து விட்டாராம் நம்பர் நடிகை.

முதலுக்கே மோசம் வந்துடும் போலவே

முதலுக்கே மோசம் வந்துடும் போலவே

ஆனால் நம்பர் நடிகை திடீரென தனது சம்பளத்தை உயர்த்தியதுடன் டைரக்டரின் சம்பளத்தையும் உயர்த்தி விட்டதால் கடுப்பாகி போய் உள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். இந்த விவகாரம் பெரிய நடிகரின் காதுக்கு போக, செம டென்ஷன் ஆகி விட்டாராம். இதனால் டைரக்டர் இப்போது வெளியிட்டிருக்கும் படம் ஓடினால் தான், தனது படத்தை இயக்குவது பற்றி மேற்கொண்டு பேசப்படும். இல்லாவிட்டால் டைரக்டரை மாற்றுவது பற்றி சிந்திக்கலாம் என தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி விட்டாராம். பெரிய நடிகரின் பட வாய்ப்பை நம்பி, அடுத்த படத்திற்கு தயாராகாமல் இருந்த டைரக்டர், நம்பர் நடிகையால் தனது சினிமா வாழ்க்கையே காலியாகி விடும் போலவே என புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X