»   »  அஜீத் மூலம் பதிலடி: ரவிக்குமார் திட்டம்

அஜீத் மூலம் பதிலடி: ரவிக்குமார் திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜக்குபாயின் திரைக் கதை சரியில்லை, அதை மாற்ற வேண்டியுள்ளது, அதனால் அதைத் தள்ளி வைத்துள்ளோம்.சந்திரமுகியின் திரைக்கதை மிக சிறப்பாக உள்ளதால் முதலில் அதை எடுக்கிறாம் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளது,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளதாம்.

பாபா படுதோல்விக்குப் பிறகு ரஜினி தரப்போகும் படம் என்பதால் ஜக்குபாய் அறிவிப்பின்போது பெரும்பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டவா எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன், நண்பர்களிடமிருந்து என்னைக்காப்பாற்று என்று டிபிக்கலான விளம்பரம் மூலம் ஜக்குபாய் குறித்த எதிர்பார்ப்பும் எகிறியது.

தொடர்ந்து ஜக்குபாய் குறித்த விவாதங்கள் கேளம்பாக்கம், பெங்களூர், ஹைதராபாத் என தீவிரமாக தொடர்ந்தது.இந் நிலையில்தான் சந்திரமுகியின் அறிவிப்பு திடீரென்று வெளியாகியது.

இதனால் அதிகம் அப்செட் ஆகிப் போனவர் கே.எஸ்.ரவிக்குமார்தான். ரஜினி படத்திற்காக கமலின் வசூல்ராஜாஎம்.பி.பி.எஸ். உள்பட பல ப்ராஜெக்ட்களை ஒதுக்கிவிட்டுக் காத்திருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

ஆனால், சந்திரமுகி அறிவிப்பு குறித்து பத்திரிக்கைகளில் படித்துத் தான் தெரிந்து கொண்டாராம் ரவிக்குமார்.தன்னிடம் மரியாதைக்காகக் கூட ஒரு வார்த்தை முன்பே சொல்லவில்லை என்பது அவரை உறுத்திக்கொண்டுள்ளதாம்.

முத்து, படையப்பா ஆகிய இரு படங்களும் ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனைகள். இந்தஇரு சாதனைகளும் என்னால்தான் வந்தது என்பதைக் கூட ரஜினி மறந்து விட்டரே என தனது நண்பர்களிடம்புலம்பியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.

சந்திரமுகியை விட மிகச் சிறப்பான ஒரு கதையை இயக்கி அதை சூப்பர் ஹிட் ஆக்கிக் காட்டுகிறேன் என்றும் சவால்விட்டுள்ளாராம் கே.எஸ்.ரவிக்குமார். இதை சொல்லியதோடு நிற்காமல் அடுத்த கட்ட வேலையிலும் தீவிரமாகஇறங்கியுள்ளார்.

அஜீத்தை சந்தித்துப் பேசிய அவர் தனது சவால் படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டாராம்.ஏற்கனவே, வில்லன் படம் மூலம் தொய்ந்து கிடந்த தனக்கு பெரிய பிரேக் ஏற்படுத்திக் கொடுத்தவர்கே.எஸ்.ரவிக்குமார் என்பதால், உடனடியாக சரி சொல்லி விட்டாராம் அஜீத்.

கே.எஸ்.ரவிக்குமாரின் புதிய படத்தில் அஜீத்திற்கு 3 வேடமாம். கிட்டத்தட்ட மூன்று முகம் பட ரஜினி மாதிரி இதில்அஜீத்தை படு வெரைட்டியாக காட்டத் திட்டமிட்டுள்ளாராம் கே.எஸ்.ரவிக்குமார். இதுவரை இல்லாத அளவுக்குபெரும் பொருட் செலவில் படத்தை உருவாக்கவும் ரவிக்குமார் திட்டமிட்டுள்ளாராம்.

இந்தப் படத்தை அஜீத்தை வைத்து சில படங்களை தயாரித்த கார்த்திகேயன் என்பவரே படத்தைத் தயாரிக்கலாம்என்று முடிவாகியிருக்கிறது. அதேசமயம், அஜீத்துக்கு நெருக்கமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியும் இந்தப் படத்தைத்தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளாரம். ஆனால், அவரை அஜீத் சில மாதங்களாக ஒதுக்கி வைத்திருப்பதால்கார்த்திகேயனுக்கே சான்ஸ் என்கிறார்கள்.

சந்திரமுகி வெளியாகும்போதே இந்தப் படத்தையும் வெளியிட்டு ரஜினிக்கு தன் பாணியில் பதில் தரத்திட்டமிட்டுள்ளாராம் கே.எஸ்.ரவிக்குமார்.

பி.கு: கே.எஸ்.ரவிக்குமாரை கைவிட்டுவிட்டு சிவாஜி பிலிம்ஸ் படத்தில் ரஜினி நடிக்க முடிவு செய்ததற்கு கன்னடநடிகர் ராஜ்குமார்தான் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். ஜக்குபாயை எடுத்தால் பாமகவினரின் எதிர்ப்பால்மீண்டும் ஒரு பாபா நிலை ஏற்படலாம்.

ஆனால், சிவாஜி பிலிம்ஸ் படத்தில் நடித்தால் அந்தப் பிரச்சினை வராது. உனது படத்திற்குப் பிரச்சினை செய்யபாமகவினர் நினைத்தால், அது சிவாஜி குடும்பத்திற்கு எதிரான பிரச்சினையாக திசை திரும்பி விடும். அதைகருணாநிதி கூட அனுமதிக்க மாட்டார். அனைத்துத் தரப்பினரும் பாமகவுக்கு எதிராக கிளம்புவார்கள்.

எனவே சிவாஜி பிலிம்ஸ் பேனர் உனக்கு பெரிய கேடயமாக இருக்கும் என்று ராஜ்குமார் கொடுத்த அட்வைஸ்காரணமாகத்தான் ஜக்குபாயை கைவிட்டுவிட்டு சந்திரமுகியில் நடிக்க வந்தார் ரஜினி என்கிறார்கள்.

மேலும் ரவிக்குமாரின் ஜாதகத்தையும் தனது ஜாதகத்தையும் ஆஸ்தான ஜோதிடரிடம் தந்து விசாரித்ததாகவும்,ரெண்டுக்கும் இப்போ சரியா வராது என்று அவர் கூறியதால் ரஜினி விலகினார் என்கிறார்கள்.

அந்த பாபாவுக்கே வெளிச்சம் !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil