»   »  சினிமா தயாரிக்கிறேன் என்ற பெயரில் ஒரு நூதன மோசடி!

சினிமா தயாரிக்கிறேன் என்ற பெயரில் ஒரு நூதன மோசடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரிய நடிகரைக் கலாய்ப்பதாகக் கூறிக் கொண்டு ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறதல்லவா... அந்தப் படத்துக்கு ரெட் போட்டிருப்பதால், வெளியில் வராது என்பது வேறு விஷயம். ஆனால் படத்தை திரைமறைவிலிருந்து தயாரிக்கும் ஒரு நபர் (கோஸ்ட் புரொட்யூசர்) செய்திருக்கும் பலே மோசடிதான் இப்போது பரவலாகப் பேசப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிக்க ஒரு பசையான புள்ளியை அணுகியுள்ளார் இந்த கோஸ்ட் புரொட்யூசர். ஏற்கெனவே ஒரு படத்தை தயாரித்து நடித்த, சற்று ஆர்வக் கோளாறு நடிகர் அவர். அவருக்கு சம்பளமெல்லாம் கிடையாது. மாறாக ஒரு காஸ்ட்லி கார், ஷூட்டிங் செலவு, காஸ்ட்யூம் செலவை ஏற்பதாகக் கூறி அவர் நடித்திருக்கிறார் (புதுமுகங்கள் என்றால் பெரும்பாலும் இப்படி ஏதாவது கொடுத்துதான் நடிக்க வேண்டும்).

Another cheating in the name of film production

இப்போது படத்தின் டப்பிங் பேச வேண்டும். அந்த நடிகர் டப்பிங் பேச வந்த போது, இந்த திரைமறைவுப் பார்ட்டி தடுத்துவிட்டாராம்.

ஏன்?

"இந்தப் படத்துல நடிச்சதுக்காக நீ எனக்கு இன்னும் ரூ 35 லட்சம் தரவேண்டும். இல்லாவிட்டால் உன்னை டப்பிங் பேசவும் விடமாட்டேன். எனது மீடியா நண்பர்கள் மூலம் அசிங்கப்படுத்திவிடுவேன்!"

-இதுதான் அந்த கோஸ்ட் புரொட்யூசரின் மிரட்டல்.

ஆனால் நடிகரின் பின்னணி கொஞ்சம் வெயிட்டானது. சண்டக்கோழி ராஜ்கிரண் மாதிரி. 'எங்களையே மிரட்டிறியா.. மவனே ட்ரிப்ளிகேன் பக்கம் வந்து பாரு.. கோடம்பாக்கத்துக்கு திரும்ப மாட்டேன்னு' பதிலுக்கு சவுண்ட் விட, ஜெர்க் ஆகி நிற்கிறாராம் கோஸ்ட் ப்ரொட்யூஸர்!

English summary
A Ghost Producer in Kollywood is trying to cheat an upcoming actor in the name of film production.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil