»   »  அவ்ளோதான்... அனுஷ்கா நடிப்புக்கு முழுக்கு?

அவ்ளோதான்... அனுஷ்கா நடிப்புக்கு முழுக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக தென் இந்தியாவில் கோலோச்சியவர் அனுஷ்கா. அனுஷ்கா கையில் இப்போது எஸ் 3, பாகுபலி 2, பாகுமதி மற்றும் ஸ்ரீநிவாச பெருமாள் புகழ் பேசும் ஒரு பக்தி படம் என நான்கு படங்கள் கையில் இருக்கின்றன. இதில் எஸ் 3 யையும், பாகுபலியையும் முடித்துக்கொடுத்து விட்டார். மீதம் இரண்டு படங்கள் தான் பாக்கி.

எப்போதுமே கையில் நான்கைந்து படங்களுடன் கெத்து காட்டும் அனுஷ்கா புது படங்கள் எதையும் ஏற்றுகொள்ளவில்லை. வரும் வாய்ப்புகளையும் தட்டி கழிக்கிறார். எனவே அவர் திருமணத்துக்கு தயாராகி விட்டார் என செய்திகள் வருகின்றன.

Anushka prepares to bid adieu for acting career

கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகிட வேண்டும் என்று நினைக்கிறாராம் அனுஷ்கா. எனவே தான் அடுத்த ஆண்டு வெளியாகும் தனது நான்கு மெகா படங்களோடு நடிப்பதை நிறுத்திவிட்டு திருமணம் செய்துகொள்ள போகிறார்.

மாப்பிள்ளை? ஆல்ரெடி முடிவு செய்து ரகசியமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். சொல்ற வரைக்கும் காத்திருப்போம்...!

English summary
Anushka has decided to stop signing new films due to her marriage
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil