»   »  சி 3 புரமோஷனைப் புறக்கணித்த அனுஷ்கா, ஸ்ருதிஹாசன்... நடவடிக்கை பாயுமா?

சி 3 புரமோஷனைப் புறக்கணித்த அனுஷ்கா, ஸ்ருதிஹாசன்... நடவடிக்கை பாயுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த தயாரிப்பாளர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. கோடிகளைக் கொட்டி படம் எடுத்து விடுகிறார்கள். ஆனால் ஹீரோயின்களை புரமோஷன்களுக்கு கூட்டி வருவதற்குத்தான் படாத பாடு படுகிறார்கள்.

நயன்தாரா, த்ரிஷா போன்றவர்கள் புரமோஷன் என்றாலே ரொம்ப பிகு செய்துகொள்கிறார்கள். நடிகைகள் புரமோஷனுக்கு வந்தால்மட்டும் டப்பா படங்களெல்லாம் ஓடிவிடுமா என கேள்வி கேட்கிறார்கள்.

Anushka, Shruthi avoid Si3 promotions

இந்த வரிசையில் இப்போது அனுஷ்காவும் ஸ்ருதிஹாசனும் சேர்ந்திருக்கிறார்கள். சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வரவிருக்கும் சி 3 படத்தில் இருவரும் நடித்திருக்கிரார்கள். ஆனால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவருமே தலைகாட்டவில்லை. ஒருவேளை சூர்யாவை தெலுங்கில் முன்னிலைப் படுத்துவதற்காகவே திட்டமிட்டு அழைக்கப்படவில்லையா... இல்லை இருவருக்குள்ளும் ஏற்பட்ட ஈகோ மோதலா என்று தெரியவில்லை.

இரண்டாவதுதான் காரணம் என்றால் நிச்சயம் தயாரிப்பாளர்களிடம் இருந்து புகார் கிளம்பும். அதுவரை காத்திருப்போம்!

English summary
Anushka and Sruthi Haasan have avoided their upcoming big film Surya's Si3.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil