»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் நாயகி அபர்ணா ஏக வருத்தத்தில் இருக்கிறார்

ஹாட்ரிக் வெற்றி அடித்த தனுசுக்கு முதல் தோல்விப் படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன். இந்தப் படத்தில் நடிக்கஆரம்பித்ததில் இருந்தே தனுசுக்கு சோதனை மேல் சோதனைகள். ரசிகர்களின் தள்ளுமுள்ளில் சிக்கி, கை முறிந்தது.

இரண்டு வாரங்கள் வரை பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டியிருந்தது. முற்றிலும் குணமாவதற்கு முன்பே, சூட்டிங்கில் கலந்துகொண்டு, படத்தை முடித்துக் கொடுத்தார். ஆனால் படம் ஓடவில்லை. அடுத்து ட்ரீம்ஸ், ராகவா பட பிரச்சனைகள் தொடர்பாககோர்ட் படியேறினார். இப்போதுதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியுள்ளார்.

ஹீரோவுக்குத்தான் என்றில்லை, கதாநாயகியாக அறிமுகமான அபர்ணாவுக்கும் பிரச்சனைகள்தான். பாரம்பரியமான கல்விநிறுவனங்கள் நடத்தி வரும் குடும்பத்திலிருந்து நடிக்க வந்தவர். பணம் கொழிக்கும் குடும்பம் இவருடையது.

சும்மா ஹாபி யாக நடிக்க வந்த அபர்ணா, தனுசுடன் சேர்ந்து படு நெருக்கமாக நடித்தார். உதட்டோடு உதடு முத்தம் வேறு. இவர் காட்டியகவர்ச்சியை, படம் வெளியான பின்பு பார்த்த குடும்பத்தினர் கொதித்துப் போய் விட்டார்களாம்.

அடுத்து படங்களில் எல்லாம் நடிக்கக் கூடாது என்று தடை விதித்தார்களாம். பின்பு கெஞ்சிக் கூத்தாடி அபர்ணா சம்மதம் வாங்கி, அடுத்து வாய்ப்பு தேடினார்.

ஆனால், படத்துக்குப் பைனான்ஸ் பண்ணினால், கதாநாயகி சான்ஸ் தருகிறோம் என்று எல்லா தயாரிப்பாளர்களும் கூறி அதிர வைத்தனர். காரணம்என்னவென்றால், பு.கோ.ச. படத்துக்கு, அபர்ணாதான் பைனான்ஸ் செய்தார் என்ற வதந்தி கோடம்பாக்கம் முழுவதும் பரவியிருந்ததுதான்.

நடிப்பதற்கே அனுமதிக்க மறுக்கும் குடும்பத்தாரிடம், பைனான்ஸ் பண்ணச் சொன்னால் அவ்வளவுதான் என்று அபர்ணா தனது நெருங்கிய தாாேழிகளிடம்புலம்பி வருகிறாராம்.

இதற்கிடையே கோலிவுட்டில் கிளம்பிய இன்னொரு வதந்தி, பு.கோ.ச. படத்தின் இயக்குனர் ஸ்டாலினை சினி பீல்டில் இருந்து காலி பண்ணும் அளவுக்குப்போயிருக்கிறது. இவர் ஏப்ரல் மாதத்தில் படத்தை இயக்கிபோது அதில் நடித்த ஸ்ரீகாந்த்தும், ஸ்னேகாவும் அடுத்தடுத்து விபத்தில்சிக்கிக் கொண்டார்கள்.

அதேபோல் இவரின் இரண்டாவது படத்தில் நடித்த தனுசுக்கு கை முறிந்ததோடு அடுத்தடுத்து பல கோர்ட் பிரச்சனைகளில்மாட்டிக் கொண்டார். இதனால் ஸ்டாலின் என்றால் ராசியில்லாதவர் என்று ஒரு கோஷ்டி செய்தி பரப்ப அரண்டு போயிருக்கிறார்இயக்குனர்.

இதுவரை ஸ்டாலினுக்கு அடுத்த பட வாய்ப்பு எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil