»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி நடனங்களால் சினிமா ரசிகர்களை கிரங்கடிக்க வைத்து வந்த நடிகை அல்போன்ஸா, தனது காதலனைத்திருமணம் செய்த கொண்டார்.

நடிகை அல்போன்ஸா பாட்ஷா படம் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானார். கவர்ச்சி நடனங்கள் மூலம்திரையுலகில் வெகு விரைவில் ஒரு இடத்தைப் பிடித்தார்.

தொடந்து பல படங்களில் ஆடிய அவர், மலையாளப் படங்களில் நடித்து வந்த உஸ்மான் என்பவரைக் காதலித்தார்.

அவரை ரகசியமாக மணந்தார். உஸ்மான் அப்படிப்பட்ட மலையாளப் படங்களில் நடித்து வருபவர்.

பலான நடிகரைப் போய் மணப்பதா என்று அல்போன்ஸா மீது ஆத்திரப் பட்டனர் அவரது பெற்றோரும்,அண்ணன் ராபர்ட்டும் (இவரும் டான்ஸர்தான்).

இந்நிலையில் பெற்றோர் பிடியில் சிக்கியிருந்த அல்போன்ஸா சில நாட்களுக்கு முன் அங்கிருந்து தப்பி ஓடிகாதலனைக் கைப்பிடித்தார்.

தற்போது இருக்க வீடும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் தோழி ஒருவரின் வீட்டில் இருவரும் அடைக்கலம்புகுந்துள்ளனர்.

இப்போது, அல்போன்ஸா தன்னைக் கொல்ல முயல்வதாக பெற்றோர் மற்றும் அண்ணன் ராபர்ட் ஆகியோர் மீதுபோலீஸில் புகார் கொடுத்துள்ளார் என்று தெரிகிறது.

Read more about: alphonsa, cinema, dancer, glamour, parents, tamilnadu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil