»   »  ஆசின்-சூர்யா ஜோடி: ஜோ ஆப்பு?

ஆசின்-சூர்யா ஜோடி: ஜோ ஆப்பு?

Subscribe to Oneindia Tamil

சூர்யாவுக்கு ஜோடியாக அசினை புக் செய்ய முக்கிய இடத்தில் இருந்து தடா போடப்பட்டிருக்கிறதாம். தடை போட்டவர் ஜோதிகாவே தான் என்கிறார்கள் கோலிவுட்டில்.

கஜினியில் கலக்கிய சூர்யா-அசின் ஜோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இதே ஜோடியை அடுத்த படத்திலும் புக் செய்ய வாரணம் ஆயிரம் மற்றும் வேல் படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆசைப்பட்டார்களாம்.

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடி என்றதும் மிகவும் ஆர்வமும் காட்டினாராம் ஆசின். ஆனால் அதற்கு ஜோவிடம் இருந்து ஸ்டிரிக்டாக தடை வந்துவிட்டதாம்.

கஜினியின் வெற்றிக்குப் பின் அசின்-சூர்யா ஜோடி குறித்து கோலிவுட்டில் ரொம்பவே சிலாகித்தார்கள். அப்போதே ஜோதிகாவுக்கு பயம் வந்துவிட்டது என்கிறார்கள். அதிலும் சூர்யா-ஆசின் இடையே கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் ஆவுட் ஆகுது என்று சிலர் கிளப்பி விடவே ஜோவின் பயம் பல மடங்காகிவிட்டதாம்.

ேஜாடின்னா அது சூர்யா-ஜோதிகா என்று இருந்தது போய், சூர்யா-ஆசின் தான் என்று பிளேட்டை மாற்றிப் போட்டு பத்திரிக்கைககளில் கட்டுரைகள் வரவே மிரண்டு ேபானார் ஜோதிகா என்கிறார்கள்.

சென்னையில் ஒரு மழைக்காலம் படம் தெடாங்கி ஏவிஎம்மில் கொஞ்சம் போல சூட்டிங்கும் நடந்து, பின்னர் ட்ராப் ஆனது நினைவிக்கலாம். அதில் சூர்யாவுக்கு ஜோடியாக புக் செய்யப்பட்டவர் நம்ம ஆசின் தான். ஆனால், அவரை தூக்கிவிட்டு ஜோதிகாவை புக் செய்யுமாறு சூர்யா கூறவே அதை இயக்குனர் ஏற்க மறுத்தார். இந்த சண்டையில் தான் படமே நின்று போனது.

இதைத் தொடர்ந்து பேரழகன் படத்தில் நடித்தார் சூர்யா. கஷ்டப்பட்டு நடித்தும் அவருக்கு பெரும் சறுக்கலாக அமைந்தது அந்த படம். இதனால் மீண்டும் ஒரு ஹிட் தர வேண்டிய கட்டாயத்தில் இருந்தவருக்கு முருகதாஸ் ரூபத்தில் கஜினி படம் வாய்த்தது.

அதிலும் ஆசின் தான் ஹீரோயின். ஆசினை மாற்றுவதில்லை என்பதில் முருகதாஸ் மிக மிக தீவிரமாக இருந்துவிட்டார். இதனால் சூர்யா-ஆசின் ஜோடி கலக்கியது. படமும் பெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து ஆசினை ஜோடியாக்க சூர்யாவே ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் ஆசின் தான் ஜோடி என இயக்குனர் கெளதம் மேனன் சொன்னபோது ரொம்ப சந்தோஷமாக ஒப்புக் கொண்டார். ஆனால், இதற்கு ஜோவிடம் இருந்து எதிர்ப்பு வந்துவிட்டதாம். இதனால் ஆசினை கழற்றிவிட்டுவிட்டார்கள்.

ஆப்கானிஸ்தானில் சூட்டிங் நடத்த செட்யூல் போட்டுவிட்டு இப்போது வேறு ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறது யூனிட்.

அதே கதை தான் வேல் படத்திலும் நடந்திருக்கிறது. இயக்குனர் ஹரி ஹீரோயினாக ஆசினை புக் செய்தார். இப்போது அதிலிருந்து ஆசின் கழற்றப்பட்டுவிடுவார் என்கிறார்கள். வேறு ஹீரோயினை தேடும் வேலையும் தொடங்கிவிட்டதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil