»   »  நயன்தாரா, அசின் லடாய்!

நயன்தாரா, அசின் லடாய்!

Subscribe to Oneindia Tamil
நயன்தாராவுக்கும், அசினுக்கும் லடாய் ஆரம்பமாகி விட்டது.

"சந்திரமுகி நாயகி நயன்தாராவும், "அய்யோடா" புகழ் அசினும் சூர்யாவுக்கு ஜோடியாக கஜினியில் நடித்து வருகிறார்கள்அல்லவா? தங்களது கேரக்டர் குறித்து இருவருக்கும் இடையே "கசமுசா ஆகியுள்ளதாம்.

ஒரு படம் ஓடிவிட்டால் போதும். சில நடிகைகள் டைரக்டர்களை படுத்தும் பாடு சொல்லி மாளாது. கேமரா கோணம் முதல் எந்தக்காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்று கூட டைரக்டர்களுக்கு சில நடிகைகள் சொல்லிக் கொடுப்பார்கள்.

அதுவும் படத்தில் 2 கதாநாயகிகள் என்றால் கேட்கவே வேண்டாம். டைரக்டர் கதி அதோ கதி தான். கதையில் எனக்குத் தான்அதிக சீன்கள் இருக்க வேண்டும் என்று கூறி டைரக்டரை புண்ணாக்கி விடுவார்கள்.

இந்த தலைவலிக்காகவே சில டைரக்டர்கள் வில்லங்கமான நடிகைகளை ஒரே படத்தில் நடிக்க வைப்பதில்லை. ஹீரோக்களை கூடசமாளித்து விடலாம். ஆனால் ஹீரோயின்களை சமாளிப்பது தான் பெரும் பாடாக இருக்கும்.

இப்போது லேட்டஸ்டாக இந்த அவஸ்தையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா நடிக்கும் கஜினி பட டைரக்டர்.

"கஜினி படத்திற்கு முதலில் புக் ஆனது அசின்தான். ஆனால் நயன்தாரா பிரபலமடைந்ததால், அவரையும் படத்தில்போட்டுள்ளார்கள்.

முதலில் அசினுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து கதையை அமைத்திருந்தார்கள். ஆனால் பின்னர் கதையை மாற்றி,நயன்தாரவுக்கு அதிக சீன்கள் வரும்படி மாற்றியுள்ளனர். இப்போது நயன்தாராவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தைசுட்டு வருகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட அசின் கடுப்பாகி விட்டாராம்.

எனக்கும் நயன்தாராவுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அவருக்கு 2 பாட்டு என்றால் எனக்கும் ரெண்டுபாட்டு வைக்கணும், அவருக்கு ஈக்வலாக எனது கேரக்டரும் இருக்க வேண்டும் என்று "டைரக்டரை" வற்புறுத்தி வருகிறாராம்.

ஆனால் நயன்தாரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். நான்தான் முதல் ஹீரோயின். எனவே, எனக்குத் தான் இம்பார்ட்டன்ஸ்இருக்கணும் என்று கிடுக்கிப் பிடி போடுகிறாராம்.

இத்தோடு நின்றதா மோதல், அது தான் இல்லை. நயன்தாரா நடிக்கும் நாட்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுகிறாராம்அசினின் அப்பா. நயனுக்கு என்னென்ன சீன்கள் வைக்கப்படுகின்றன, அதே அளவிலான சீன்கள் தனது மகளுக்கும்வைக்கப்பட்டுள்ளதா என்று கம்பேர் செய்து வருகிறாராம் அசினின் "அச்சன்"!

இவர்களின் மோதலால், இரண்டு ரோஜாக்களிடம் சிக்கிக் கொண்ட முள்ளாக டைரக்டர் தவித்து வருகிறாராம்.

Read more about: asin, clash, ego, nayanthara

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil