வயித்தெரிச்சலால் வாடி வதங்கும் விருது நடிகை.. தோழியா இருந்த நடிகையின் முன்னேற்றம் பிடிக்கலையா?

By Staff

சென்னை: ஸ்டோன் நடிகையின் பல படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், இந்த படம் ஜெயிக்கும் என தயாரிப்பாளருக்கே முதலில் நம்பிக்கை இல்லாத நிலையில், அவருடைய படங்களை விட அதிரி புதிரி ஹிட் அடித்து மாஸ் காட்டி வரும் நிலையில், ஸ்டோன் நடிகையின் உயிர்த் தோழியாக இருந்த விருது நடிகை சமீப காலமாக போன் போட்டால் கூட எடுப்பது கிடையாது என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

ஆரம்பத்தில், டாப் நடிகையாக இருந்த விருது நடிகை இளம் நடிகையான ஸ்டோன் நடிகையிடம் ரொம்பவே அக்கறையுடனும் அன்புடனும் பேசி பழகி வந்தார். மற்ற நடிகைகளுடன் கூட இல்லாத நட்பும் நெருக்கமும் இந்த நடிகையிடம் இருந்து வந்தது.

Award Actress upset over Young Actress recent box office success

ஆனால், தற்போது தன்னை விட உயரத்துக்கு எங்கேயோ ஸ்டோன் நடிகை சென்றுவிட்டார் என்கிற பொறாமை காரணமாக விருது நடிகை நட்பை துண்டித்துக் கொண்டார் என்கின்றனர்.

திருமணம் வரை நல்ல நட்பு: விருது நடிகைக்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில், திருமணம் வரையில் கூட அந்த ஸ்டோன் நடிகையுடன் நல்ல நட்பை பாராட்டி வந்தார். கடைக்குட்டி தங்கச்சி போலவே அவரை பராமரித்தும் அன்பு செலுத்தியும் வந்தார். அவரும் திரையுலக அக்கா என்றே நினைத்துக் கொண்டும் ஒரு தோழி போலவே பழகி வந்த நிலையில், ஒரே ஒரு படத்தின் வெற்றி காரணமாக இருவருக்கும் இடையே இருந்த நட்பு அப்பளம் போல நொறுங்கிவிட்டது என்கின்றனர்.

விருது நடிகைக்கு வயித்தெரிச்சல்: விருதுகளை குவித்த அந்த நடிகை பலருக்கும் முன்பாக ஸ்டார்டம்மை அடைந்த நிலையில், ரொம்பவே கெத்துக் காட்டி வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு தொடர்ந்து சினிமாவில் தோல்வி முகமாக உள்ள நிலையில், யாருமே அவரை பெரிதாக மதிக்கவில்லையாம். அப்படி இருந்தும் இந்த ஸ்டோன் நடிகையுடன் நட்பாக இருந்து வந்தவர், தற்போது அவருடைய அபார வளர்ச்சியை பார்த்து வயித்தெரிச்சல் வந்துவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

மனதளவில் கஷ்டம்: தன்னுடைய படம் ரிலீஸ் ஆகக்கூட முடியாத அளவுக்கு உள்ள நிலையில், நேத்து வந்த நடிகையின் படம் இந்தளவுக்கு வசூல் வேட்டை நடத்தி வருவதை கண்டு பொறாமையில் பொங்கி வருகிறாராம். முன்னதாக இந்த படத்தில் நடிக்க நடிகையிடம் தான் தயாரிப்பாளர் அணுகினார் என்றும் ஓவர் பந்தா காட்டிய நிலையில் தான் படம் இந்த நடிகைக்கு சென்றது என்றும் பேசிக் கொள்கின்றனர். அந்த பொறாமை தான் தற்போது நடிகையை வாட்டி வதைத்து வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X