»   »  சரியான காமெடி நடிகர் கிடைக்காமல் தவிக்கும் தாடி ஹீரோ!

சரியான காமெடி நடிகர் கிடைக்காமல் தவிக்கும் தாடி ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென் மாவட்ட படங்களாக எடுத்தும் நடித்தும் தள்ளும் தாடி ஹீரோ அவர். அவரது ஆரம்ப கால படங்களில் ஆக்‌ஷன், செண்டிமெண்ட், நட்பு, காதல் ஆகியவையோடு நகைச்சுவைக்கும் சமமான முக்கியத்துவம் தரப்பட்டது. அதிலும் குறிப்பாக பரோட்டா நடிகர் ஹீரோவோடு கூட்டணி சேர்ந்த படம் நன்றாக போனது.

ஆனால் படைக்கும் கடவுள் படத்தோடு அந்த கூட்டணி முறிந்தது. அந்தப் படத்தில்தான் கிராமத்தை விட்டு நகரத்து லுக்குக்கு செல்லப்போகிறேன் என்று சொல்லி பரோட்டாவை சைடாக்கிவிட்டு சாண்டலை மெயின் காமெடியனாக்கினார் ஹீரோ. இதனால் நொந்து போன பரோட்டா இனி ஹீரோ குரூப்போடு இணைவதில்லை என சபதம் எடுத்துவிட்டாராம்.

Beard hero worries for continuous flops

ஹீரோவின் சமீபகால படங்களில் எல்லாம் இருந்தும் கூட ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு ஏற்பட்டு படங்கள் சரியாக போவதில்லை. லேட்டஸ்ட் மாடு படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. காரணம் காமெடி இல்லாததுதான் என்பதை உணர்ந்த ஹீரோ பரோட்டாவை மீண்டும் அழைத்துப் பார்த்தார். பழசை நினைவில் வைத்துக்கொண்டு முடியாது என சொல்லிவிட்டாராம் பரோட்டா.

வேறு வழியில்லாமல் அடுத்த படத்தில் கொங்கு சீனியர் காமெடி நடிகைக்கு அதிக முக்கியத்துவம் தரவிருக்கிறார். அந்தம்மாவின் ஸோலோ காமெடி எடுபடும் காலமா இது?

English summary
Beard Hero is in big worry due to the continuous flops of his recent movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos