»   »  மிஷ்கினுடன் பாவனா காதல்?

மிஷ்கினுடன் பாவனா காதல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சித்திரம் பேசுதடி இயக்குநர் மிஷ்கினுக்கும், பாவனாவுக்கும் காதல் மலர்ந்து உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக ஒரு செய்தி கோலிவுட்டை வலம் வர ஆரம்பித்துள்ளது.

நடிகைகள் குறித்த காதல் பிளஸ் கல்யாண வதந்திகள் சமீப காலமாக கோலிவுட்டை கலக்கி வருகிறது. குறிப்பாக மீரா ஜாஸ்மின் குறித்து அடுத்தடுத்து வதந்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

மீரா ஜாஸ்மினுக்கும், மண்டலின் சீனிவாஸ் தம்பி மாண்டலின் ராஜேஷுக்கும் ரகசியக் கல்யாணம் ஆகி விட்டதாக கடைசியாக வந்த செய்தி கூறியது. ஆனால் இதை வதந்தி என்று மறுத்து விட்டார் மீரா.

எனக்குக் கல்யாணமானால் எல்லோருக்கும் சொல்லி விட்டுத்தான் செய்வேன் என்றும் போனஸாக விளக்கினார். அடுத்து மீனாவைப் பற்றி புது வதந்தி பரவியது.

கன்னட நடிகர் சுதீஷுடன் கல்யாணம் செய்து கொண்டார் மீனா என்ற செய்தியே இன்னும் குழப்பமாக உள்ள நிலையில் ஹாங்காங்கில் செட்டிலாகி விட்ட இந்தியத் தொழிலதிபரை மணந்துள்ளார் மீனா என்ற புதுச் செய்தி பரவியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ஆனால் யார்தான் இப்படி தவறான செய்திகளைப் பரப்புகிறார்களோ என்று புலம்பலாக மறுத்தார் மீனா.

இந் நிலையில் புதிதாக பாவனா, மிஷ்கின் குறித்த காதல் வதந்தி காட்டுத் தீயாக கோலிவுட்டில் பரவியுள்ளது. மிஷ்கின் ஏற்கனவே கல்யாணமானவர். ஆனால் மனைவி தனியாக வசித்து வருகிறாராம்.

இந் நிலையில், மிஷ்கின் ஒரு ஃபிளாட்டில் பாவனாவோடு குடும்பப் பந்தத்தை மேற்கொண்டிருப்பதாக அவரது நண்பர்கள் வட்டாரம் கூறுகிறது. அஃபீஷியலாக கல்யாணம் செய்து கொள்ளாமல் குடித்தனம் மட்டும் நடத்தி வருகிறார்களாம். அதாவது லிவிங் டுகெதர்.

ஆனால் பாவனா தரப்பு இதை மறுத்துள்ளது. இருவரும் நல்ல நண்பர்கள். அதைப் போய் அபாண்டமாக பேசுகிறார்களே என்று பாவனா தரப்பு ஆதங்கம் காட்டுகிறது.

மேலும் இந்த வதந்திகளைக் கிளப்பி விடுவதே மீரா ஜாஸ்மின் என்று கூறப்படுவதுதான் வதந்திகளின் உச்சகட்டமாக உள்ளது.

நான் கடவுள் படத்திலிருந்து பாவனா தூக்கப்பட மீராதான் காரணம் என்கிறாரக்ள். அந்தக் கடுப்பில் தான் மீராவைப் பற்றி பாவனாவும், அவரைப் பற்றி மீராவும் மாறி மாறி வதந்திகளை தூக்கிப் போட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.

மீரா குறித்த வதந்திகளுக்கு மிஷ்கின்தான் காரணம் என்கிறது மீரா தரப்பு. அதேபோல பாவனா பற்றிய வதந்திகளை கிளப்புவது மீரா என்கிறது பாவனா தரப்பு.

மொத்தத்தில் மொட்டைத் தலையில் மீன் பிடிக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil