»   »  ஜக்குபாயில் ஜோதிகா போய் பூமிகா?

ஜக்குபாயில் ஜோதிகா போய் பூமிகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐஸ்வர்யா ராய், ஜோதிகா போய், இப்போது ஜக்குபாய் படத்தில் பூமிகா கதாநாயகியாக நடிக்கப் போகிறார்என்று செய்திகள் வருகின்றன.


ஜக்குபாய் படம் பற்றிய அறிவிப்பை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு, சில தினங்களுக்கு முன்புவெளியிட்டார் ரஜினி.

அன்றிலிருந்து படத்தைப் பற்றி ஏதாவது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. முதலில் கதாநாயகி ஐஸ்வர்யாராயுடன் பேசப்பட்டது. ஆனால், அவர் ஜோடி சேர மறுக்கவே, ஜோதிகாவின் கால்ஷீட் கோரப்பட்டது.இதையடுத்து ஜோதிகாவும் நடிக்க ஆர்வமாக இருந்தார்.

ஆனால், ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா சரியாக வராது என்று சொல்லப்பட்டதால், கொஞ்சம் மெச்சூர் லுக் உள்ளபூமிகாவை ஹீரோயினாக்கப் போகிறார் ரஜினி என்கிறார்கள்.

ஜக்குபாய் படத்தை தெலுங்கில் தயாரிக்கப் போகும் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தான் பூமிகாவைசிபாரிசு செய்ததாகவும் சொல்கிறார்கள்.

படையப்பாவில் நீலாம்பரி கேரக்டர் போல் இந்தப் படத்தில் கதாநாயகி வேடம் பவர்புல்லான வேடம் என்பதால்,அதற்கு சரியான ஆள் பூமிகாதான் என்று ரஜினியும் நினைக்கிறாராம்.

தெலுங்கில் மிஸ்ஸம்மா, ஹிந்தியில் தேரே நாம் ஆகிய படங்களில் பூமிகாவின் நடிப்பை சிலாகித்துக் கூறியரத்னம், ஜோதிகாவை வைத்துக் கொண்டு வெயிட்டான ரோல் செய்ய வேண்டாம் என்று கூறி பூமிகாவைரெக்கமண்ட் செய்தாராம்.

பூமிகாவோ இப்போதைக்கு இந்தியில் தான் ஆர்வம் காட்டி வருகிறார். தெலுங்கைக் கூட ஒதுக்கிவிட்டு இந்தியில்கவனம் செலுத்தி வரும் தமிழில் நாட்டம் இல்லாதவராகவே காணப்படுகிறார். ஆனால், ரஜினியுடன் ஜோடிஎன்றால் நிச்சயம் வந்துவிடுவார் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil