உச்ச நடிகர் கடைசி வரை அதை பத்தி மூச்சே விடலையே.. பாஸ் நடிகரின் பிளான் எல்லாம் வீணாப்போச்சா?
சென்னை: சமீபத்திய நிகழ்ச்சியில் எப்படியாவது ஒரு வார்த்தையாவது தன்னைப் பற்றியோ தன்னுடன் இணைந்து நடிப்பது பற்றியோ உச்ச நடிகர் வாய் திறப்பார் என எதிர்பார்த்த பாஸ் நடிகருக்கு கடைசியாக பாயாசம் போட்டது தான் மிச்சம் என்கின்றனர்.
பாஸ் நடிகரின் சிஷ்ய புள்ளை பார்த்த வேலைக்கு உச்ச நடிகருக்கு புதுசா காரும் இல்லை மோரும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் பயங்கர அப்செட் ஆகிவிட்டது. அந்த பிரபல நடிகரும் அய்யய்யோ தம்பி நீ உடைச்ச பர்னிச்சரே போதும், இன்னும் பெரிய பட்ஜெட்ல கம்பி கட்ற கதையெல்லாம் விடவே விடாத, பாடி தாங்காது என எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

இந்நிலையில், பாஸ் நடிகரை தூண்டிவிட்டு எப்படியாவது தனது பெரிய கனவை நினைவாக்கி விட வேண்டும் என்றும் ட்ரோல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் டைரக்டர் விட்ட தூது கடைசியில் தூசி தட்டக் கூட ஆள் இல்லாத நிலையில் பாழடைந்து போய்விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
வாய்விட்ட பாஸ் நடிகர்: இந்த வருஷம் பாஸ் நடிகர் வம்பு நடிகருடன் பார்ட்னர்ஷிப் போட்டு சின்ன நம்பர் நடிகையை நம்பி எடுத்த படம் அதள பாதாளத்திற்கு நடிகரின் நிலைமையை கொண்டு சென்றுவிட்டது அவரை ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டது. பக்கத்து ஸ்டேட்டில் நாலு சீனுக்கு வந்தாலே விசில் பறக்குது, விருது கிடைக்குது, தமிழில் உசுரை கொடுத்து ஒரு நாள் முழுவதும் மேக்கப் போட்டு நடித்தாலும், ஒருத்தனும் மதிக்க மாட்றானே நினைத்த நடிகர் எப்படியாவது உச்ச நடிகருடன் இணைந்து ஒரு படத்தை பண்ணி ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முடிவுடன் அந்த விஷயத்தை ஓபன் செய்து விட்டார்.
மூச்சே விடாத உச்ச நடிகர்: எப்படியும் இருவரும் சந்திக்கும் நிகழ்ச்சியில் பாஸ் நடிகருடன் மீண்டும் இணைந்து நடிக்கப் போகிறேன் என உச்ச நடிகர் வாய் திறப்பார் என எதிர்பார்த்த பாஸ் நடிகருக்கு கடைசி வரைக்கும் அவர் மூச்சே விடாதது ரொம்பவே மன வேதனையை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
அதுதான் காரணம்?: மீண்டும் இணைந்து நடிப்பதில் பிரச்சனையே இல்லை என்றும் சிஷ்ய புள்ளை இயக்கத்தில் மட்டும் வேண்டாம் என உச்ச நடிகர் யோசித்து வருவது தான் அவரது அமைதிக்கு காரணம் என்கின்றனர். எப்படி இருந்தாலும் தன்னை மீண்டும் ஏமாற்றிவிட்டால் தாங்க முடியாது என்றும் தனக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்காது என்பதையும் புரிந்துக் கொண்டே ஒதுங்கி விட்டார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











