பிரைட் நடிகர் எல்லாம் வேஸ்ட்.. தமாஸ் நடிகருக்கு கொக்கிப் போடும் பிரமாண்டம்.. மகள் மூலமா தூது?

By Staff

சென்னை: நோலன் இயக்குநர் பக்கா கம்பேக் கொடுத்த நிலையில், நாமும் தமாஸ் நடிகரை வைத்து ஒரு படம் பண்ணி கம்பேக் கொடுத்து விட வேண்டும் என்கிற முயற்சியில் சீரியஸாக களமிறங்கி விட்டாராம் அந்த பிரமாண்டம் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

எப்போதுமே பழசை மறக்காமல் பல படிகள் மேலேறி சென்றுக் கொண்டே இருக்கும் தமாஸ் நடிகர் தன்னை வைத்து படம் தயாரித்த டைரக்டர் கஷ்டத்தில் இருக்கும் போது கை கொடுக்கிறேன் என வாக்குக் கொடுத்து அந்த இயக்குநருக்கு கம்பேக் படத்தையும் கொடுத்துள்ளார்.

Big DIrector plans to give a massive comeback with Emerging Hero

ஊரெல்லாம் படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இப்போது தும்மினால் தான் உண்டு என பிரமாண்டம் மற்றும் ஒரு சில சீனிய இயக்குநர்களும் தமாஸ் நடிகரின் கால்ஷீட்டை பெற களமிறங்கி விட்டதாக கூறுகின்றனர்.

முதல் நாளே பாராட்டு: முன்பெல்லாம் ரொம்பவே பிசியான இயக்குநராக இருந்து வந்த அந்த பிரமாண்டம் இப்போது எடுத்த படத்தையே முடித்து ரிலீஸ் பண்ண முடியாமல் வெட்டியாக உள்ள நிலையில், தமாஸ் நடிகரின் படத்தை முதல் நாளே பார்த்து பாராட்டியுள்ளார். அவுட்டேட்டட் ஆகிவிட்டோம் என தன்னை பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், சரியான கம்பேக் கொடுக்க தமாஸ் நடிகர் தான் சரியான தீர்வு என்றும் எல்லா நடிப்பும் அவரிடம் இருந்து அப்படி வருகிறதே என பார்த்து ஆச்சர்யப்பட்டு போய் விட்டாராம்.

மகள் மூலமாக தூது: ஏற்கனவே தமாஸ் நடிகருடன் தனது மகள் இணைந்து நடித்த நிலையில், அவர் மூலமாக தூது விட்டு எப்படியாவது ஒரு படத்தில் கமிட் செய்து விட வேண்டும் என்கிற வெறியில் உழைத்து வருகிறாராம் பிரமாண்டம் என்கின்றனர். மேலும், ஏற்கனவே அவர் யோசித்து வைத்த நடிகர் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அவரை கழட்டி விடவும் முடிவு செய்துவிட்டாராம்.

பிரைட் நடிகர் வேண்டாம்: அந்த வரலாற்று படத்துக்கு பிரமாண்டம் பிரைட் நடிகரைத்தான் டிக் செய்து வைத்திருந்தாராம். ஆனால், பிரைட் நடிகரின் வரலாற்று படம் வேலைக்கு ஆகாத நிலையில், இனிமேல் அதற்கு அவர் செட்டாக மாட்டார் என்றும் தமாஸ் நடிகரை லீடு ஹீரோவாக வைத்து படத்தை பண்ணலாம் என்கிற முடிவுக்கே வந்துவிட்டார் என்கின்றனர். கூடிய சீக்கிரமே பிரமாண்டத்தின் நகர்வுகள் தெரிய வரும் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X