காப்பி இயக்குநர் படத்திலும் உஷாரான சூரியன்.. ஹீரோவுக்கும் டைரக்டருக்கும் கடைசில அல்வா தானா?

By Staff

சென்னை: பல நூறு கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தால் மேலும், பல நூறு கோடி சம்பாதித்து விடலாம் என்கிற மெகா திட்டங்களுடன் அந்த சூரிய நிறுவனம் அகல கால்களை ஏற்கனவே பக்கத்து நாட்டு நிறுவனம் வைத்து திவால் ஆனதை பார்த்தும் உணர்ந்து கொள்ளாமல் இருந்த நிலையில், சமீபத்தில் வெளியான படம் பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டதாக கூறுகின்றன்ர.

இந்நிலையில், உஷாரான சூரிய நிறுவனம் அடுத்து காப்பி இயக்குநருடன் கைகோர்த்த நிலையில், அவருக்கு ஒரு பெரிய தொகை சம்பளமும் அந்த அவார்டு நடிகருக்கும் பெத்த சம்பளமும் கேட்கப் பட்ட நிலையில் பெரிய செக்காக வைத்து விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

Big Producer place checkmate to Director and Hero in Salary matter

அனைத்துக்கும் காரணம் உச்ச நடிகர் படத்தின் மூலம் விழுந்த பலத்த அடிதான் என்றும் அதனால் பல்வேறு வழிகளில் பக்குவாக யோசித்து பல நூறு கோடியை எப்படி காப்பாற்றலாம் என இப்போதே கணக்குப் போட ஆரம்பித்து விட்டதாக கூறுகின்றனர்.

பெரிய பாடம்: பிரம்மாண்ட பொருட்செலவில் படங்களை தயாரித்து உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கிறேன் என நம்பி பல உச்ச நடிகர்களை ஒன்று திரட்டி ஒண்ணுமே இல்லாத உப்புமா கதைக்காக பல நூறு கோடிகளை கொட்டிய தயாரிப்பு நிறுவனம் பெரிய பாடத்தை சமீபத்தில் கற்றுக் கொண்டதாக கூறுகின்றனர். ஆரம்பத்தில் இருந்த கெத்து சில நாட்களிலேயே புஷ் ஆகி போன நிலையில், பல இடங்களில் இருந்தும் வர வேண்டிய பணம் அப்படியே முடங்கிப் போய் விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. படத்தில் வேலை பார்த்த பலர் மீது கடும் கோபத்தில் சூரியனை போல அந்த தயாரிப்பாளர் சுட்டெரித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

உஷாரான தயாரிப்பாளர்: எந்தளவுக்கு வேண்டுமானாலும் செலவு செய்ய ரெடியாக இருக்கிறேன். ஆனால், ஹீரோ, இயக்குநர் சம்பளம் என்றெல்லாம் தனியாக பில்லை தூக்கிட்டு வராதீங்க, படத்தை ஒர்த்தாக எடுத்து ஓட வைத்தால் ஷேர் தருகிறேன். இல்லை என்றால், அப்படியே திரும்பி பார்க்காமல் ஓடிவிடுங்க என்றும் தான் போட்ட காசை எப்படி எடுக்கணுங்கிற வித்தை தனக்குத் தெரியும் என்றும் கறார் காட்டி வருகிறாராம்.

டைரக்டருக்கு டர்ரு: இதுவரை பெரிதாக சொதப்பாமல் சுட்டு எடுத்தாலும் ஹிட்டு கொடுத்து வரும் டைரக்டர் இந்த முறை பெரியளவில் ஹீரோவை நம்பி இறங்கி ஆட துடித்த நிலையில், டைரக்டர் தன்னிடமே செக் வைத்துள்ள நிலையில், ரொம்பவே கவனமாக செயல்பட்டு வருகிறார் என்கின்றனர். நடிகருக்கும் தனது படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதால் ரொம்பவே சின்சியராக இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X