நாமும் அவங்களை களத்தில் இறக்குவோம்.. அப்பாவுக்கு ஐடியா கொடுத்ததே வாரிசு தானாம்.. மாஸ் நடிகர் ஷாக்?
சென்னை: அப்பாவை தொடர்ந்து மாஸ் நடிகர் ட்ரோல் செய்து வரும் நிலையில், அவரை அவரது ரூட்டிலேயே சென்று அடிக்கும் முடிவுக்கு வாரிசு இறங்கிவிட்டாராம். அதன் வெளிப்பாடு தான் மாஸ் நடிகர் தொட்ட கல்வி விஷயத்தையும் அதில், சினிமா பிரபலங்களை வரிசையாக இறக்கி மக்கள் மத்தியில் ஸ்பாட்லைட் தேடும் யுக்தியை கையில் எடுத்துள்ளனர் என்கின்றனர்.
மாஸ் நடிகர் எப்படி அனைத்து இடங்களிலும் தனது முகத்தை முன்னிறுத்தியே பில்டப் செய்து வருகிறாரோ அதே பாணியை கையில் எடுத்துக் கொண்டு சினிமா பிரபலங்கள் பலரை வைத்து மாஸ் நடிகர் இமேஜை டோட்டல் டேமேஜ் செய்ய பக்காவான பிளானை போட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இத்தனை ஆண்டுகளாக தன்னுடன் கூட இருந்தவங்களே தனக்கு எதிராக கிளம்பி உள்ளதை பார்த்து மாஸ் நடிகர் கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளார் என்றும் இதை எதிர்கொள்ள புதிய யுக்திகளை வகுக்க தனது டீமிடம் ஆர்டர் போட்டுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
அந்த நடிகரையே காலி பண்ணாங்க: ஏற்கனவே இப்படித்தான் அந்த பெரிய இடத்தை கம்பீரமாக எதிர்த்த அந்த காந்த நடிகரையே சிரிப்பு நடிகராக மாற்றி சில சினிமா பிரபலங்களை வைத்தே அட்டாக் செய்து ஆல் அவுட் செய்தனர். அதே பாணியை மீண்டும் கையில் எடுத்தால் மட்டுமே மாஸ் நடிகரை களத்தில் வீழ்த்த முடியும் என்கிற ஐடியாவை அப்பாவுக்கு பக்காவாக பிளான் போட்டு கொடுத்து வாரிசு வேலையை ஆரம்பித்துள்ளார் என்கின்றனர்.
ஒரே எதிரி: மற்ற கட்சிகளை எல்லாம் ஏற்கனவே காலி செய்த நிலையில், நமக்கு எந்தவொரு எதிரியும் இல்லை என கெத்தாக இருந்து வந்த பெரிய இடத்துக்கு தற்போது மாஸ் நடிகரால் பெரும் குடச்சல் கிளம்பியுள்ள நிலையில், அவர் தான் தங்களது ஒரே எதிரி என்றும் முதல் டார்கெட் என்றும் அவரை வளரவிட்டால் நம்முடைய அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும் என மாஸ் நடிகரை மடக்க சில முன்னணி சினிமா பிரபலங்களை ஏவுகணை போல பயன்படுத்த வாரிசு முடிவெடுத்துள்ளார் என்றும் அதன் காரணமாகவே சிலரை கொம்பு சீவிவிட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
மாஸ் நடிகருக்கு ஷாக்: எப்படியாவது களத்தில் இறங்கிவிட்டோம், முடிந்தவரை போராடி வென்றுவிட வேண்டும் என முடிவெடுத்த மாஸ் நடிகருக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்தே பெரிய எதிர்ப்பு மற்றும் எதிர்வினைகள் கிளம்பும் என தெரிய வந்துள்ள நிலையில், ரொம்பவே ஷாக் ஆகியிருக்கிறார் என்றும் இந்த எதிர்ப்பை எப்படி சமாளிப்பது என்றும் யோசித்து வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











