»   »  கமலுக்கு பிபாஷா கொடுத்த நோஸ்-கட்

கமலுக்கு பிபாஷா கொடுத்த நோஸ்-கட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் மனீஷா கொய்ராலா நடித்து வருவது பழைய செய்தி.

இந்தப் படத்தில் நடிக்க முதலில் மாதுரி தீக்ஷித்தைக் கேட்டார், கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லி அவர் மறுக்கவேதபுவை கேட்டார். முதலில் ஒப்புக் கொண்ட தபு பின்னர் ஜகா வாங்கிவிட்டார்.

அதற்கப்புறம் பிபாஷா பாசுவை கமல் அணுகியதாக செய்திகள் வந்தன. அவரும் பின் வாங்கியதால் தான் வேறுவழியில்லாமல் மனிஷாவை போட்டு படத்தை எடுத்து வருகிறார்.

தமிழில் சச்சின் படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் பிபாஷா ஏன் கமலுடன் நடிக்க மறுத்தார் என்பதற்கானசுவாரஸ்யமான காரணம் வெளிவர ஆரம்பித்துள்ளது.

பிபாஷாவை கமல் அணுகி தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். சந்தோஷமடைந்த பிபாஷாபடத்தின் கதையை தனக்கு சொல்லுமாறு கேட்டுள்ளார்.

கமல் உடனே தனது உதவியாளர் ஒருவரை பிபாஷாவிடம் அனுப்பி கதையை சொல்லச் சொல்லியுள்ளார். கமல்வருவார் என நினைத்துக் காத்திருந்த பிபாஷாவுக்கு அவரது உதவியாளர் வந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது.

கதை சொல்ல வந்த உதவியாளரை அப்படியே திருப்பி அனுப்பி விட்ட பிபாஷா, படத்தில் நடிக்கவும் தனக்குவிருப்பமில்லை என்று கமலிடம் கூறி விடுமாறும் சொல்லி அனுப்பி விட்டாராம்.

பிபாஷா கொடுத்த இந்த அட்டாக்கில் மனம் வெறுத்துப் போன கமல் அதன் பிறகு அவர் பக்கம் திரும்பிக் கூடபார்க்காமல் மனிஷாவுக்கு போன் போட்டு வேலையை முடித்துவிட்டார்.

ஒரு உப்புச் சப்பில்லாத காரணத்தைக் கூறி பிபாஷா நடிக்க மறுத்ததில் கமலுக்கு ஏகக் கோபமாம்.

கமலுடன் ஜோடி சேரும் வாய்ப்பை உதறிய பிபாஷா இப்போது விஜய்க்கு ஜோடியாக சச்சின் படத்தில் நடிக்கிறார்.இதில் பாய்ஸ் ஹரிணிக்குத் தான் முக்கிய ஹீரோயின் ரோலாம். பிபாஷாவுக்கு செகண்ட் லீட் ரோல் தான்கொடுத்திருக்கிறார்கள்.

இதனால் பிபாஷா கோபப்பட, சம்பளத்தை பெருமளவில் கூட்டித் தந்து அவரை அமைதிப்படுத்தி விட்டார்களாம்!

Read more about: actress bipasa cinema film kamal ramya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil